மகன்
51
"அழகான கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளைக் குழந்தைகள் படிக்க வேண்டும்..."
"தந்தையிடம் மகன் காட்டவேண்டிய பாசம் பற்றி நிறையச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறேன்."
"வந்துவிட்டது குதிரை—ஏய், சடையா! என்ன காலிலே இரத்தம் கசிகிறது...
"குதிரையை நான் பிடித்துக்கொள்கிறேன்...போய்க் கழுவி ஏதாவது மருந்து போட்டு..."
"பைத்யம் டீச்சர்! இப்படி ஒரு நாளைக்கு ஒன்பது தடவை காயம்படும், இரத்தம் ஒழுகும்...அது இவனையெல்லாம் ஒன்றும் செய்யாது...களிமண்ணோ, என்னமோ வைத்துக் கட்டுவான்...சரியாகிப் போகும்."
"என்னிடம் மருந்து இருக்கிறது; கொண்டு வந்து கொடுக்கிறேன்..."
"வேண்டாம் தொரை! இது ஒண்ணுமில்லை...ஈ எறும்பு கடிக்கிறமாதிரி! ஒண்ணும் பண்ணாது. ஓட்டிப் பார்க்கறீங்களா குதிரையை..."
"இல்லை...எனக்கு நிம்மதியாக இல்லை...மருந்து வேண்டாமென்றா சொல்லுகிறீர்..."
"சடையா! பிடிடா! மிஸ்டர் லிங்கம், நம்ம குதிரை நல்ல 'ட்ராட்' போகும்...சும்மா இங்கேயே ஓட்டிக் காட்டுகிறேன் பார்க்கிறீரா..."
ஜெமீன்தார் குதிரை சவாரி செய்யும்போது சொக்கலிங்கம் தழுதழுத்த குரலில் பேசுகிறான் மெதுவாக.
"அப்பா! அப்பா! என்ன கொடுமை அப்பா இது!
தங்கள் உடலில் ஒழுகும் இரத்தத்தைக்கூடத் துடைக்கும் பாக்கியம் எனக்கு இல்லையே...பார்த்துக் கொண்டு, பதறாமல் இருக்கவேண்டி நேரிட்டுவிட்டதே அப்பா! நான் எப்படித் தாங்கிக் கொள்வேன்! மாளிகையின் கோலாகல வாழ்வு எனக்கு...குதிரைக் கொட்டிலில் நீங்கள்...நான் மகன்...மகனா அப்பா நான்! மாபாவி...!