பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன்

65

"ஏதாவது நேரிட்டு விட்டிருந்தாலும், என்ன செய்திருப்பேன் தெரியுமா? இந்த வேலைக்காரப் பயல்கள் அவ்வளவு பேரையும் சவுக்கால் அடித்திருப்பேன்" என்றார் ஜெமீன்தாரர்.

"சவுக்குக்குத் தான் கேடு! சுட்டுத் தள்ளிவிட வேண்டும்" என்றார் காளிங்கராயர்!

"குழந்தையைக் காப்பாற்றிய மிஸ்டர் லிங்கத்தைப் பாராட்டாமல், வீரம் பேசுகிறீர்களா, வீரம்" என்று கூறிவிட்டுத் தன் கணவரை சுட்டுவிடுவதுபோல பார்த்தாள் லலிதா.

உமா மகேஸ்வரி, கேலிப் புன்னகை செய்தாள்.

'சரி, சரி! நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு; விருந்து நடக்கட்டும்! மறுபடியும் எல்லோருக்கும் அல்வா!' என்று உத்திரவிட்டார் ஜெமீன்தாரர்.

வீரம், தீரம் ஆகியவை மேட்டுக் குடியினரிடம் மட்டுமே இருக்கும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் ஜெமீன்தாரர்.

'நல்ல குடியில் பிறந்தவர்கள் மட்டுமே, ஆபத்தைத் துச்சமென்று எண்ணுவார்கள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். ஏழைகள் பணமில்லாதவர்கள் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பண்புகளும் அவர்களிடம் கிடையாது' என்பது அவர் கருத்து.

உயிர் காத்த உத்தமனாக சொக்கலிங்கம் இருப்பதற்குக் காரணம், அவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதுதான் என்ற தம்முடைய தத்துவத்தை விளக்க ஆரம்பித்தார் ஜெமீன்தாரர்.

"ஆயிரம் சொல்லுங்கள்—எல்லோரும் சமம்—அனைவரும் மனிதரே—மனிதர் யாவரும் கடவுளின் பிள்ளைகளே என்றெல்லாம் பேதம் இருக்கத்தான் செய்கிறது..."

"பணக்காரன் ஏழை என்ற பேதம்தானே"—


பூ-158-வ-3