66
வண்டிக்காரன்
"அதை நான் பெரிதாகக் கருதவில்லை—பணம் தேடிக் கொள்ளலாம்; இழந்தும் விடலாம்...நான் சொல்வது பண்பு...நல்ல குடியிலே பிறந்தவரின் பண்பு...மற்றவர்களுக்கு அந்தப் பண்பு இருப்பதில்லை."
"ஆமாமாம்! நற்குடிப் பிறந்தவர்கள் என்பது பார்த்தாலே தெரிந்து விடுமே."
"பேச்சு—நடவடிக்கை—எல்லாவற்றிலும் அந்த முத்திரை விழுந்திருக்கும்."
"இதோ, மிஸ்டர் லிங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்..."
"இத்தனைப் பெரிய குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ள யாரால் முடியும்..."
"முடியும்...என் தாயாரால் முடியும்..."
"இதுதான் பண்பு! நற்குடி பிறந்தோர் மட்டுமே பெறக்கூடிய பண்பு. இதனை விலைகொடுத்து வாங்க முடியாது. கடலில் முத்து விளைவது போல இது தன்னாலே விளைவது; நற்குடி என்ற வயலில்."
"அப்பா இன்று கவிதா நடையில் அல்லவா பேசுகிறார்கள்...!"
"களிப்பு மிகுந்திடும் போது கவிதை தன்னாலே அரக்குமாமே..."
"என் பேரப்பிள்ளை குதிரையின் காலின்கீழ் சிக்கிக் கொள்ளாமல் மிஸ்டர் லிங்கம் காப்பாற்றினாரே அது அவருடைய ஆற்றலை, தைரியத்தைக் காட்டிற்று என்று தான் எல்லோரும் பாராட்டுவர். நான் சொல்கிறேன், குழந்தைக்கு ஆபத்து என்பது தெரிந்த உடன், காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு வந்ததே, அது பண்பு—அதைத்தான் நான் போற்றுகிறேன். அந்தப் பண்புதான் நற்குடி பிறந்ததால் வருவது. முரட்டுக் குதிரைகளை அடக்க வலிவுள்ள எந்த வேலைக்காரனாலும் முடியும். சடையன் அடக்காத குதிரையா! ஆனால் அது வலிவைக் காட்டுகிறது, உணர்வை