பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வண்டிக்காரன்

"புகையிலை கேட்டால் என்ன, கொடுத்தால் என்ன, அதிலே என்ன குற்றம் காண்கிறீர்..."

"அதிலே குற்றம் காண நான் என்ன முட்டாளா? இவள் போனாளே புகையிலை கொண்டு வர, அப்போது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி வண்டிக்கார கிழவியிடம் சொல்லிவிட்டுப் போனாள்..."

"ஜாக்கிரதையாகத்தான் ஆயா நடந்து கொண்டிருக்கிறாள்".

"இவள்? குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா, செய்தாளா? செய்திருந்தால், குழந்தை தத்தித் தத்தி நடந்து செல்லுமா?—குதிரை வருவது தெரியாமல் இவள் என்ன செய்தாள்? குழந்தையை விட்டுவிட்டு இவளும் போய்விட்டாள். எங்கே? கேட்டேன். சுண்ணாம்பு எடுத்துவரச் சென்றாளாம்."

"குழந்தையைக் கவனித்து கொள்ள வேண்டுமே என்ற பொறுப்பு உணர்ச்சி இருந்ததா? எப்படி இருக்கும்? நற்குடியில் மட்டுந்தானே அத்தகைய பண்பு இருக்க முடியும்? "கிழவியைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியான நேரம். எங்கள் குலக் கொடியை இந்தக் குணவான் காப்பாற்றிய நேரம். அவருடைய நற்பண்புகளுக்காக நாம் எல்லோரும் அவருக்கு நம்முடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளும் நேரம்."

"கம்பெனி பெரிய துரை வந்திருக்கிறார் தங்களைக் காண!"

"எல்லாச் சந்தோஷமும் ஒரே நேரத்தில் வருகிறது...நல்ல நாள் இன்று...அழைத்துவா! வருக! வருக! நல்வரவு ஆகுக!"

"விருந்தும் விழாவும் நடக்கும்போது வந்து சேர்ந்தேன்...அதிர்ஷ்டக்காரன்...யாருக்குப் பிறந்த நாள்..."