70
வண்டிக்காரன்
லிங்கத்தை உதவி மானேஜராக நியமித்து உத்திரவு வந்து இருக்கிறது."
"இலண்டன் கம்பெனியிலா! மிஸ்டர் லிங்கம்! என் வாழ்த்துக்கள்."
"எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"நன்றி மிஸ்ர் நார்மன், மிக்க நன்றி...அங்கு செல்வது என் ஆராய்ச்சித் துறைக்குப் பயன்படும்..."
"மற்றோர் மகிழ்ச்சியான செய்தி! மிஸ்டர் நார்மன்! என் இளைய மகள் உமாவை மிஸ்டர் லிங்கத்துக்குத் தர விரும்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"இது உண்மையான விழாப் பரிசு! என்ன மிஸ்டர் லிங்கம்! மிஸ் உமா! சம்மதந்தானே! கேட்பானேன், கண்களே கீதம் பாடுகின்றனவே!"
அப்போது தோட்டத்துப் பக்கமிருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கதறிடும் ஒலியும் கேட்கிறது.
எல்லோரும் பதறிப்போய், கீழே ஓடினார்கள்; சத்தம் வந்த திக்கு நோக்கி.
குடிசைக்குப் பக்கத்தில் சடையப்பன் வீழ்ந்து கிடந்தான், இரத்த வெள்ளத்தில்.
எதிரே, துப்பாக்கியுடன் காளிங்கராயர் ஆவேசம் வந்தவர்போல் நின்று கொண்டிருந்தார்.
ஜெமீன்தாரர், நார்மன் துரையிடம் பேசிக் கொண்டிருந்தபோது, காளிங்கராயர் கீழே வந்திருக்கிறார். யாரும் அதனைக் கவனிக்கவில்லை.
கீழே சடையப்பன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டதும், சொக்கலிங்கம் அலறினான்; துடித்தான்; அவர்மேல் விழுந்து புரண்டு புரண்டு அழுதான்.
காரணம் தெரியாமல் மற்றவர்கள் திகைத்து நின்றனர்.
"அய்யய்யோ! அநியாயம் நடந்து விட்டதே...யார் செய்த அக்ரமம் இது?"