புதிய பொலிவு
"அம்மாடியோ...! நான் மாட்டேன். யாராச்சும் பார்த்துட்டா?"
சாமி சாட்சியாச் சொல்றேன்...
பெத்தவங்க பெரியவங்களைக் கேட்டு முடிப்பயா, எங்கிட்டெவந்து 'கெக்சபிக்கே'ன்னு கொஞ்சிகிட்டு இருந்தா...?
"நானென்ன, மாடப்புறாவா, நீ சீட்டி அடிச்சதும் ஓடியாந்து, உன் தோளிலே தொத்திக்கிட..."
சினிமா பார்த்துப் பார்த்து, நீ வேண விளையாட்டு கத்துகிட்டே..இதோ பாரு! எனக்கு அதெல்லாம் பிடிக்காது. சொல்லிட்டேன்...
ஆமா, நீ இதுவரையில் என்னிடம் சொல்லவேயில்லையே! உனக்குப் பொரிவிளங்கா உருண்டைன்னா, ரொம்பப் பிரியமாமே...இந்தா, இரண்டுதான் மிச்சமாச்சி...
உன் கண்ணுக்கு நான் அழகுன்னா, ஊரார் அவ்வளவு பேருமா, என்னை அழகின்னு சொல்லுவாங்க? குப்பி பாட்டி என்னை என்ன சொல்லும் தெரியுமா?
போடி, போடி; கோண வடுகுக்காரி! எப்பப் பார்த்தாலும் இளிச்சிகிட்டுக் கிடக்கறயே, பெண்களுக்கு இதுவா இலட்சணம்னு சொல்லும்...
அப்பப்பா! போதும் போதும்னு ஆயிடுது, உன்னண்டெ சிக்கி விட்டா...இது என்ன கன்னமா, பச்சரிசி மாங்காயா? நகத்தைப் பாரு, சாமியாரு மாதிரி...! தா! ரொம்ப விளை-