பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 புதிய பெண் ஜென்மம் இருக்கிறது என்றுதான் தெரிந்து கொண்டி ருந்தாள். மல்லிகையின் மணம், ஆகா! மனதுக்கு அளிக்கும் இன்பத்துக்கு ஈடானது வேறேதுமில்லை என்று, காகித மலரினை முகர்ந்து கொண்டே, பேசிடும் நாடகக்காரர்போல அல்லாமலும், காதலைப் பெற்று இன்புற்று அனுபவம் பெறா மலேயே, வீட்டில் காட்டுக் கூச்சலின்றி வேறு கேளாத குடும்ப: வாழ்க்கையில் இருந்துகொண்டே, காதலின் மணம், மாண்பு, மதுரம் ஆகியவை பற்றிப் பேசிடுவோர் போல அல்லாமலும் செல்லி காதலைப் பற்றிய பேச்சோ, பாட்டோ தெரிந்து கொள்ளாமலேயே, உண்மைக் கரதலைப் பெற்று மகிழ்ந் தாள்--அவளுக்கு அந்த இன்பத்தை அளித்த வேலப்பன், 'வசனம்' கேட்டிருக்கிறானே தவிர, மனப்பாடம் செய்து கொண்டு பேசுபவனல்ல; சிலசமயங்களிலே ஒரு அடி, இரண்டு அடி காதல் பாட்டுப் பாடுவான்; தலைப்பு ஒன்று, முடிவு மற்றொன்றாக இருக்கும்!! கொடி அறியாமலே, கொண்ட மல்லிகை மலர்ந்திருப்பதுபோல், உள்ளத்தில் காதல் பூத்து, மணம் பரப்பிற்று. கிராமம், எனவே யாரும் அறியார்கள் என்று இவர்கள் எண்ணிக் விஷயம் கொண்டிருந்தபோதே, செல்லாயி வேலப்பன் வெகுவாகவும், வேகமாகவும் பரவிக் கொண்டிருந்தது. வம்பு தும்புக்குப் போக தவன், வருவாய் அறிந்து செலவு செய் பவன், பெரியவர்களிடம் மரியாதை காட்டுபவன், பொருளுக் காக அலையமாட்டான்; இல்லை என்று எவரிடமும் கை ஏந்தவும் மாட்டான்; உழைப்பான், நத்திப் பிழைக்கமாட் டான்-ஊருக்கு உபகாரம்செய்வான்; பெரியதனக்காரனாகி மிரட்டமாட்டான் என்று, வேலப்பன் குணம் கிராமத்தாரால் பாராட்டப்பட்டது. மணம் செல்வியின் அம்மை நோய் கடுமையாக பரவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்திலே பாதிப் பேர்களைப் பலி வாங்கி விட்டது -- அந்தச் சமயத்தில்தான், வேலப்பனுடைய தாயும் தந்தையும் இறந்து போயினர்-ஒண்டிக் கட்டையானான் வேலப்பன்.