92
புதிய
பெரியவர் எழுந்தார். 'கமிட்டி' அவ்வளவும் கொட்டகையை விட்டு வெளியேறிவிட்டது; கொடிமரத்தான் பின்னாலே ஓடிவந்தான்.
"ஏன்? ஏன்? எங்கே கிளம்பிவிட்டிங்க?"
"எங்கேயா? கூடை வாங்கிகிட்டு வந்து, உன்னோட தலைவன் தலையிலே கவிழ்க்க. வெட்கமில்லாமெ எங்களண்டை பேச வேறே வந்துட்டாயா...?"
"என்னங்க இது, எதுக்கு இவ்வளவு கோபம்?"
"கோவம் வரலாமா, பாவம்! அங்கே வாரி வாரிக் கொட்டறானே ஒரு புத்திசாலி, கருணையை; அதைப் பார்த்துமா கோவம் வரலாமான்னு கேட்கறே! ஆக வேண்டிய கரியம் ஆயிடுச்சி. இனி நாம அடிச்சவரையிலே இலாபம்னு எண்ணிகிட்டு, அந்த மனுஷன், ஆகாசத்துக்கும் பூமிக்குமா, குதிச்சுக் குதிச்சுப் பேசறானே—ஜனங்க மூக்காலே அழறாங்கன்னு...இவனுங்க நாட்டை நடத்தற நடப்புக்கு, ஜனங்க அழாமெ, இவனுங்க எதிரே வந்து டான்சு ஆடுவாங்க, டான்சு...என்னா எடுத்தேன்—கவிழ்த்தேன்னு பேசறான் அந்த மனுஷன். கஷ்டப்படறம். அதைச் சொல்லி, ஐயா! அப்பான்னு! வேண்டிக் கொள்றோம்...அதைக் கேக்கப் பொறுக்கலியாமே இவருக்கு. குச்சிக் கிழங்குக்கு மார்க்கட்டு இல்லையானா, நான் என்ன செய்ய, கூடையிலே வைச்சிகிட்டு விற்கவான்னு கேட்கறானே, இதுவாய்யா ஒரு மந்திரி பேசற மரியாதையான பேச்சு? குத்தல் பேச்சு இல்லியா அது? அவனவன் கும்பிகாயுதேன்னு கஷ்டப்பட்டுகிட்டு, இவனுங்க கிட்டத்தானே அதிகாரம் இருக்குது, போயி நம்மோட குறையைச் சொல்லுவோம்னு வந்தா, கூடையிலே வைச்சிகிட்டு விற்கவான்னு கேலி பேசறாரு...பெரிய குபேரரு! வித்தா என்னவாம்—தலையிலே கூடையைத் தூக்கி வைச்சா, பூமி பொளந்துடுமா, இல்லை, இவரோட, மண்டை வெடிச்சுடுமா..பேசறான் பார், மகாபெரிய மேதாவின்னு நினைச்சிகிட்டு. போன வருஷம் நான் என் கண்ணாலே பார்த்தனே நெசவுக்காரனுக கஷ்டப்படறாங்கன்னு சொல்லி, கைத்தறித் துணி மூட்டையைத் தூக்கித் தோளிலே போட்டுக்கிட்டு