பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - வெண்ணிலவில்

அந்தக் கதையை இங்கே பெயரையும் சம்பவங் களையும் மட்டும் சற்று முன் பின்னக மாற்றி அமைத்து என்னுடைய சொந்த பாணியில் எழுதி, யிருக்கிறேன். கதையைப் படித்து முடித்ததும் கோசல்ராம் தம்முடைய மனச்சாட்சிப்படி நடந்து கொண்டாரா இல்லையா என்பதை நேயர்கள்தான்

முடிவு கட்ட வேண்டும். -

இரவு சுமார் பத்து மணியிருக்கும். வட்ட வடி வான வானத்துச் சந்திரன் தன்னுடைய பால் போன்ற அமுக நிலவைப் பூமியில் வர்ஷித்துக் கொண்டிருந்தான். பூந்தமல்லி ஹைரோடு, சர்க் கார் பஸ்களின் ஓட்டத்திலிருந்து ஒய்வு பெற்ற சமயம். அங்கங்கே ஒரிரண்டு பங்களாக்களில் மட்டும் மின்சார விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது.

கேயர்கள் தயவு செய்து பூந்தமல்லிச் சாலையி லிருந்து வட்க்குப் பக்கம் புரசைவாக்கத்தை நோக் கிப் பிரிந்து செல்லும் பாதையின் மீது தங்கள் கவ னத்தைச் செலுத்த வேண்டும். ஏனெனில் நமது கதாநாயகர் நீ வேதநாயகம் இப்போது மேற்படி ரஸ்தாவில்தான் நடந்துபோய்க்கொண்டிருக்கிருரர். . . ஆம வருஷ காலம் கடும் சிறை வாழ்க்கையை அனுபவித்த பிறகு, இன்று விடுதலை பெற்றுத் தம் முடைய சொந்த வீட்டை நோக்கிச் செல்கிருரர்.

கல்லவர்களுக்கு இது காலமில்லை என்று கூறுவது நீ வேதநாய்கம் விஷயத்தில் முற்றிலும்