பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது 53

தெரிந்தது? சற்றுமுன்தாங்கள் தான் கிராதகனைக் கொன்றது என்று சொன்னிர்களே ?” என்று அவரைக் கேட்டேன். -

" எப்படியா ? நான்தான் அந்த கேப்டன் ரகு -நாதன். ரஞ்சனியை மனப்பூர்வமாகக் காதலித்த வன் நான்தான். வேதநாயகத்தின் குடும்பத்தைக் கெடுத்த கிராதகனைச் சும்மா விட்டால் பின்னல் அவனுல் ரஞ்சனிக்கு ஆபத்து நேரும் என்று எண் -ணியே அவனைச் சுட்டுத் தீர்த்தேன். அதே வழக் இல் ஜூரியாய் அமரும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. கோர்ட்டில் மனச்சாட்சி குறுக்கிட்ட தால் வேதநாயகம் குற்றவாளி அல்ல வென்று ஜூரர்களுடன் வாதாடினேன். அவ்வளவுதான் விஷயம் ' என்ருர்.

கோசல்ராம்! தாங்கள்தான் கேப்டன் ரகு நாதன் என்ருல் பெயரை எப்போது மாற்றிக் கொண்டீர்கள்?' என்று கடைசி சந்தேகத்தைக் கேட்டேன்.

rí சமீபத்தில்தான்; வைத்தியத்தொழிலிலிருந்து இப்போது ரிடைய ராகி விட்டேன்." - -

கோசல்ராம் ' என்ற பெயரில் ஒரு இங்கிலிஷ் மருந்துக் கடை ஆரம்பித்து கடத்துகிறேன். அது முதல் என் பெயரும் கோசல்ராம் என்றே மாறி விட்டது. இந்தப் பிரபலமான பெயரை வைத்தே இப்போது முனிசிபல் தேர்தலில் போட்டி டோடு கிறேன் என்று கூறினர்.

4 .