ராஜம் கிருஷ்ணன்
119
உன் சரிதை எனக்குத் தெரியும் வராதே என்றானாம். அவள் வந்து முறையிட்டுவிட்டு, மாண்டு போனாள். அப்போது, மன்னர் எந்த வகையில் நியாயம் செய்ய வேண்டும்?”
எந்த வகையில்...? அக்கினிகுண்டமும் நாடுகடத்தலும் பெண்ணுக்கு மட்டுமா?
“தாயே, தங்களைப் பார்க்குந்தோறும் அவர்களுக்கு மனச்சாட்சி கூர்முள்ளாக உறுத்தும். எனக்கு உயிர்வாழவே பிடிக்கவில்லை. காட்டுப்பூனை கவ்வட்டும் என்று நானே வலியச் சென்றேன். அது என்னைத் தோட்டம் வரைக்கும் கொண்டு சென்ற பின் அஞ்சி விட்டுவிட்டது. பிறகு.”
அவள் மனதில் கரும்படலத்தில் வரும் மங்கிய காட்சிகளாக இளையவன் வந்ததும் ஆணை என்றதும் கிழட்டுச் சுமந்திரர் தேரோட்டியதும் வருகின்றன.
முள் உறுத்தாமலிருக்க, சத்தியத்தைக் கொல்வதா? எது சத்தியம்? எது முள்? முள்ளை மறைக்க முள் படலத்தையே அதன்மீது போடுவதா? இளையவருக்கு நான் இந்த அநியாயம் செய்ய மாட்டேன் என்று சொல்ல அறிவு இல்லையா? அன்னை கைகேயிக்கு இது தெரியுமா? கிழட்டு மந்திரிக்கு நியாய உணர் வே செத்துவிட்டதா? ஊர்மக்கள் இதை ஒத்துக் கொள்கின்றனரா?.
ஒருகால் இவள் குலம் கோத்திரம் அறியாத அநாதை என்பதால் இந்த நியாயம் செல்லுபடியாகிறதோ?
ஜலஜாவின் முகம் கண்களில் தெரிகிறது.
பெண்ணொருத்திக்கு ஒர் ஆண்மகனை விரும்ப உரிமை கிடையாது.அன்று மூக்கையும் செவியையும் அரிந்தார்கள் பெண் கொலைக்கு இவர்கள் கூசியதில்லையே? பொன்னிறமான சுருண்ட கூந்தலும். பளிங்கு விழிகளும், பொன் மேனியுமாக உலவிய ஜலஜையின் மீது அளவிறந்த இரக்கம் மேலிடுகிறது.
அவள் எந்த உயர்குல அழகியின் வயிற்றில் உதித்தவளோ? அல்லது ஒர் அடிமையின் உடலை எந்த உயர் குலச்சீமான் ஆண்டு