பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

139

மகாராணிக்கு ஒரு சிறு குழந்தைக்கு, சமையலறை ராதையின் பஞ்சைக் குழந்தைக்கு ஒரு விள்ளல் விண்டு கொடுக்க முடியாது. அங்கு அன்பு இல்லை. முள்வேலிகள்: முட்சுவர்கள். பெரியம்மா, இவர்கள் முன்பு நச்சம்பு போட்டு வெளியாட்களைக் கொன்று விடுவார்களாமே?”

“ஆமாம். முள்வேலிகளுக்கிடையில் இருந்து ஊழியம் செய்வதைக் காட்டிலும் தன்மானத்துடன் பட்டினி அதுபவிக் கலாம் என்று நினைத்தார்கள். வெளியாள் தென்பட்டால் கொன்று இழுத்து வந்து, அவன் எலும்புகளை மட்டுமே இக் காட்டின் அரணாகப் போட்டுவிடுவார்கள். அந்த இடத்தில்தான் நீ இருக்கிறாய். இங்கேதான் இந்த அன்பு விளைந்திருக்கிறது.”

பூமகள் எதுவுமே சொல்லத்தோன்றாதவளாக இருக்கிறாள்.


14

வசந்தத்துக்குப்பின் தொடர்ந்த வெப்பம் முடிவுபெறுகிறது. புதிய மழையின் இளஞ்சாரலில் வனமே புத்தாடை புனைந்து பூரிக்கிறது. சீதளக்காற்று மெல்ல மயில் தோகை கொண்டு வருடுகிறது. பூமகள் நிறை சூலியாக, குடிலுக்கு வெளியே உள்ள கல் இருக்கையில் அமர்ந்து, வயிரச்சுடர் போல, நீர்த்துளி களிடையே ஊடுருவும் கதிர்களைப் பார்த்துப் பரவசப்படுகிறாள். அப்போது, வேடுவர் குடியில் இருந்து, விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு வந்து, ஆண்களும் பெண்களும் அந்த நீண்ட கொட்டடியில் வைக்கின்றனர். இளம் பெண்கள் எல்லோரும் முடி சீவி, மலர்சூடிச் சிங்காரித்துக் கொண்டி ருக்கின்றனர். மிதுனபுரிச்சந்தையில் வாங்கிய வண்ண மேற்றிய நார் ஆடைகளை முழங்காலில் இருந்து மார்பு மூடும் வகையில், உடுத்த பெருமை பொங்க, நாணம் பாலிக்கின்றனர்.

‘கிடுவி’ என்ற மூதாட்டி பல்வேறு மலர்களைத் தொடுத்த மாலை ஒன்றைக் கொண்டு வந்து பூமகளின் கழுத்தில் சூட்டுகிறாள். எல்லோரும் குலவை இடுகிறார்கள். விரிந்தலையும்