பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

143

இருக்கணுமில்ல? எப்பவுமின்னா யாரும் இங்க வரமாட்டாங்க இப்ப அப்படி இல்ல பாருங்க”

“எப்போதும் போல் இல்லாம, இப்ப என்ன வந்திட்டது? போடா, போ வீணாக அதுவும் இதுவும் சொல்லி நீ காட்டுத்தீ கிளப்பாதே.நந்தசாமி அங்க இருக்காங்க இல்ல? ஒரு படை இங்க ஆறு தாண்டாது. நமக்குக் காவல் ஆறு. நெஞ்சுலே கவடுவச்சி வாரவங்கள, அது காவு வாங்கும். அதும், வனதேவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வராம. அந்தத் தாய் காப்பாத்துவா!”

அவள் உள்ளுற அமைதி குலைகிறாள்.

“முன்புவனம் சென்றவர்களைத் திருப்பி அழைக்க, கைகேயி மைந்தன் வந்தாரே, அப்படி அந்தத் தாய் இவரை அனுப்பி இருப்பாளோ?.”

“ஏன் பெரியம்மா? என்ன கொடி, எந்த தேசத்து ராசா, எதுக்கு வந்தாங்கன்னு கேளுங்க!”

“நீ கவலையேபடாதே கண்ணம்மா, அவர்கள் யாரும் இங்கே வர மாட்டார்கள். இந்த அரச குலத்தைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.”

“மாட்டார்களா?”

அவள் விழிகளில் நீர் மல்குகிறது.

“அவ்வளவு இரக்கமற்றவர்களா? தமக்குத் தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இந்தக் கொலை பாதகம் போன்ற செயலுக்கு யாருமே வருந்தி, பரிகாரம் செய்ய வரமாட்டார்களா?. எப்படியானாலும் இந்த நிலையில் அவள் நாடு திரும்ப முடியுமோ? எப்படியும் அவள் பிள்ளை பெற்று எடுத்துக் கொண்டு நாடு திரும்பும் நேரம் வாரமலே போய் விடுமோ?”

எரிபுகுந்து பரிசுத்தமானபின், மன்னரின் வித்தைத்தானே அவள் மணிவயிறு தாங்கி இருக்கிறது? குலக்கொடி வம்சம் தழைக்க வந்த வாரிசு, பட்டத்துக்குரிய இளவரசு என்றெல்லாம் சிறப்புடைய உயிரை அல்லவோ அவள் தாங்கி இருக்கிறாள்?.