பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வனதேவியின் மைந்தர்கள்

எப்படியும் ஒரு நாள் தவறை உணர்ந்து அவர்கள் வராமலிருக்க மாட்டார்கள். போகும்போது, கிடுவிக்கிழவி, லு, எல்லோரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இவர்கள் மாளிகைச் சிறப்புகளைப் பார்த்தால் எத்தனை அதிசயப்படுவார்கள்! பட்டாடைகளும், பணியாரங்களும் கொடுத்து மகிழ்விக்க, நன்றி தெரிவிக்க, அவளுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரவேண்டுமே? -

இந்தச் செய்தி அங்கிருந்த மகிழ்ச்சிக் கூட்டத்தின் சூழலைப் பாதித்துவிட்டது. உணவுண்டபின் எஞ்சியவற்றை எடுத்து வைத்து விட்டு இடங்களை கும்பாவும், சதிரியும் சுத்தம் செய்கிறார்கள். மற்றவர்கள் கலைந்து போகிறார்கள். சம்பூகன் இவற்றைக் கவனிக்கவேயில்லை. ஓர் இலையைப் பறித்து ஊத்ல் செய்து, குருட்டுப் பையனின் இதழ்களில் பொருத்தி ஊதச் செய்கிறான். ஒசைவரும் இன்பத்தில் குழந்தை மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறான். சூழலின் கனம் அவர்களைப் பாதிக்கவில்லை.

ஆனால், சற்றைக்கெல்லாம், வேடர் குடிப் பிள்ளைகள், தோல் பொருந்திய தப்பட்டைகளைத் தட்டிக் கொண்டு கூச்சல் போட்டுக் கொண்டும் ஆற்றை நோக்கிப் படை செல்கிறார்கள். வில் அம்பும் காணப்படுகின்றன. பூமகள் மெல்ல எழுந்து முற்றம் கடந்த பகங்குவியல்களுக்கிடையே செல்லும் பிள்ளைகளைப் பார்க்கிறாள். பம்பைச் சத்தம் காதைப் பிளப்பதுபோல் தோன்றுகிறது.

“அம்மா. அம்மா. அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்! அவர்கள் நச்சம்புகளை எய்துவிடப்போகிறார்கள்! தாயே!.” குரல் வெடித்து வருகிறது. அவள் அங்கேயே புற்றரையில் சாய்கிறாள். சாய்பவளை லு ஓடிவந்து தாங்கிக் கொள்கிறாள். எந்தத் துணியும் மறைக்காத மார்பகம். உண்ட உணவு- மது எல்லாம் குழம்பும் ஒரு மனம் வீசும் மேனி.

“அவங்க இங்கே வரமாட்டாங்க. வனதேவி, நமக்கு ஒராபத்தும் வராது. பயப்படாம வாம்மா. நந்தசாமி அவங்க யாரையும் வரவிடமாட்டார்” அவள் நிமிர்ந்து, கறுத்த பற்கள்