பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வனதேவியின் மைந்தர்கள்

“அதோ பார்த்தாயா, மரத்தின் மேல்? ஒரு மூப்பு பார்த்துக் கொண்டு இருக்கிறது.நீ செய்யும் இந்தத்தானம், அந்த மூப்பு’க்குக் கொண்டாட்டமாக இருக்கிறது: லபக்கென்று குதித்து ஒரு கொத்தாக வாயில் கவ்விக் கொண்டு செல்ல நல்ல சந்தர்ப்பம் கொடுக்கிறீர் அல்லவா?”

“ஒ. அதெல்லாம் நம் அன்னை இருக்கும் இந்த இடத்தில் நடக்காது. அதனால் தான் நான் தைரியமாக இந்தப் பறவைகளுக்கு விருந்து வைக்கிறேன்.”

“அப்படியா? நம் அன்னை ஏதேனும் மந்திர-தந்திரம் வைத்திருக்கிறார்களா? அப்படியெல்லாம் நடக்காது என்று நீர் உறுதி மொழிவைக்க அன்றொருநாள் இதே இடத்தில் தான் இங்கு வந்து குந்திய கிளியை, இதே போல் ஒரு நாமதாரி மூப்பு லபக்கென்று விழுங்கி சீரணம் செய்தது.”

“அப்போது ஒருகால் நம் அன்னை இங்கே இருந்திருக்க மாட்டார். அவர் சுவாசக்காற்று இங்கே கலந்திருக்காது.”

“இந்த விதண்டா வாதம் தேவையில்லை. நீர் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.” அஜயன் மிகவும் கூர்மையாக முகத்தை வைத்துக் கொள்வதை பூமகள் குடிலின் வாயில் ஒரம் நின்று பார்க்கிறாள். அவளுக்குச் சிரிப்பு வருகிறது.

மெல்ல நழுவிக் குடிலின் பக்கம் புதிதாகக் கன்று போட்ட பகவுக்குப் புல் வைக்கிறாள்.

“அதென்ன, இரண்டு பக்கம்?”

“அம்மா இருக்குமிடத்தில் வன் கொலை நடக்காதென்றீர். அதற்கு இன்னொரு பக்கம் உண்டென்றேன்.”

“இன்னொரு பக்கம் என்று ஒன்றும் கிடையாது.நடக்காது என்றால் நடக்காது. உண்மை, சத்தியம் என்றால் முழுமை. இதை எடுத்தாலும் குறைத்தாலும் முழுமையே. உண்மை; சத்தியம்; தூய்மை.”

“எனக்குப் புரியவில்லை”