பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

195

நம்மையும் ஈடுபடுத்தும் வாழ்க்கையே வேள்விதான். வேள்வி என்பது ஓம குண்டத்தில் போடும் சமித்துகளும் உயிர்ப்பிண்டங் களும் அல்ல. நல்ல உணவைப் பக்குவப்படுத்துவதும் வேள்வித் தீதான். அதை நாம் காத்துவைக்கிறோம். அதே தீ, நமது நல் ஒழுக்கங்களாகிய சமித்துகளால் நம்முள் எப்போதும் அனை யாமல் நம்மைப் பாதுகாக்கிறது. அது நம் உணவைச் செரிக்கச் செய்கிறது. நமக்கு ஆற்றலைத் தருகிறது. அது நமக்கு அறிவைத்தருகிறது. அது நமக்கு நல்ல தெளிவைத்தருகிறது; வீரியத்தையும் தருகிறது. அந்த ஒளி என்றும் அனையாமல் இருக்க, மேலும் மேலும் நம்மை புதுப்பித்துக் கொள்வோம். மூர்க்கத்தனம், பேராசை, சினம், எல்லாவற்றையும் அத்தியில் இட்டுப் பொகக்கிக் கொள்வோம். வேள்வி என்பது வெறும் சடங்குகளில் இல்லை. அன்றாடம் காலை, மாலைகளில், வானத்துத்தேவனையும், காற்றையும் மண்ணையும் நாம் தொழுதேற்றி நிற்பது. இந்த வேள்விக்கு ஆதாரசுருதிகள். காயத்ரி’ மந்திரத்தை எவரும் உச்சரித்து அறிவொளியும் வீரியமும் நல்கும் தேவனை வழிபடலாம். நம் சித்தத்தைத் துய்மையாக்கிக் கொள்ள, முப்புரி நூல் அடையாளம் எதற்கு? நம்முள் இச்சக்திகளை எழுந்தருளச் செய்து ஆற்றலைப் பெற அடையாளம் எதற்கு?.

அன்னையின் குரலில் அவர்கள் கட்டுண்டவர்களாய் இருக்கிறார்கள். கச்சலன் வந்து சென்று, இரண்டு பருவங்கள் கடந்துவிட்டன. மாரிக் காலம் முடிந்து, பனிமலர்கள் பூக்கும் பருவம். ஆனால் இந்தச் சூழலில், எது இளவேனில், எது முது வேனில் எதுவும் தெரிவதில்லை. முன்பு, பிள்ளைகள் சுவைத்துத் துப்பிய மாங்கொட்டைகளில் இரண்டு இந்நாள் இளமரங் களாகப் பூரித்து, பூக்குலைகளுடன் பொலிகின்றன.

பிள்ளைகள் இருவரும், கூரைக்குப் புல் சேகரிக்கக் கிளம்புகின்றனர். பெரியன்னை வருகிறார்.

“தனியாக எங்கே செல்கிறீர்கள்? குழந்தைகளே?. நீலன், கேசு, மாதுலன், யாரையும் காணவில்லை?”

“அவர்கள் தேனெடுக்கப் போயிருக்கிறார்கள் பெரியம்மா.”