பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

வனதேவியின் மைந்தர்கள்

-கிறார்கள். தானியம் உதிர்க்காத கதிர்களைக் கட்டுகிறார்கள். ஏதோ ஓர் அபாயம் நம் உழைப்புப் பறி போகும் வகையில் வந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

பூமகளும், தங்கத் தட்டுகளில், அப்பமும், பாலன்னமும் வேறு பணியாரங்களும் அடுக்கிய காட்சியை நினைக்கிறாள். இப்படி உழைத்து, அந்த விளைவைத்தானே மேல்வருக்கம் ஒரு துன்பமும் அறியாமல் உண்ணுகிறது! தேனிக் கொட்டல்களுக்குத் தப்பி தேன் சேகரித்தல்; காடு காடாகச் சென்று பட்டுக்கூடு சேகரித்தல்.

இவை எதுவும் அறியாத அறிவிலிகள், அசுவமேதம் செய்கிறார்கள்! இந்த இடத்தில் ஓர் அம்பு விழக்கூடாது. விழுந்தால் வனம் பற்றி எரியும் முற்றம் முழுதுமாக தானியக் கதிர்கள் அடைந்து விடுகின்றன.

அவர்கள் நீராடி வரும்போது கூழ் சித்தமாக்கி, கனிகளுடனும் தேனுடனும் வைக்கிறாள்.வேடர்குடியில் இருந்து மீன் அவித்த உணவும் வருகிறது. “நந்தசுவாமி, பூவன் மாதுலன் எல்லோருக்கும் யார் உணவு கொடுப்பார்கள்?.”

விஜயனின் உச்சி மோர்ந்து நெற்றியில் முத்தம் வைக்கிறாள் அன்னை.

“நந்தசுவாமிக்கு, யாவாலி ஆசிரமத்துப் பெண்களும் ஆண்களும் எல்லாம் கொடுப்பார்கள். கவலைப்படாதீர்கள்!”

“பூமியில் எல்லாத் தானியங்களும் ஒட்ட எடுக்கவில்லை. ஒட்ட எடுத்தால் இரண்டு கூடை இருக்கும். நல்ல தீட்டிப் புடைத்து, இடிச்சி மாவாக்கி, கூழு கிளறிக் கொஞ்சம் வெல்லக்கட்டி கடிச்சிட்டா.” நாக்கை சப்புக் கொட்டுகிறது வருணி,

“ஒரு பானை கூழு பத்தாது”

“முன்னெல்லாம் இந்தக் கூழே தெரியாது. நான் சின்னப்ப இருக்கையில், புகையில் கட்டிப் போட்ட இறைச்சிதா கடிக்சி இழுத்து தின்னுவம்.”