ராஜம் கிருஷ்ணன்
219
தெரிகின்றன. வில்லும் அம்பும் தாங்கிய தோள்கள் அவள் குலை நடுங்கச் செய்கின்றன.
பின்னே... ஒரு பாலகன். அஜயனையும் விஜயனையும் போன்ற வயதினன். வருகிறான்.
பட்டாடை முத்துச்சரங்கள் விளங்கும் மேலங்கி; செவிகளில் குண்டலங்கள். கற்றையான முடி பளபளத்துப் பிடரியில் புரள, முத்துமணிகள் தொங்கும் பாகை அவளுக்கு மயிர்க்கூச்செறிகிறது.
இவன் யார்? உணர்மியும். அப்போது கருவுற்றிருந்தாள்.அவள் மகனே அந்தப் பாலகனை ஆயத்தழுவி மகிழும் கிளர்ச்சியில் முன் வருகிறாள்.
“மைந்த வாப்பா, நீ எந்த நாட்டைச் சேர்ந்த அரசிளங்குமான்’ என்று வினவுகிறாள்.
நந்தமுனிக்கும் கண்ணிர் வழிகிறது.
பையன் தயங்கி ஒதுங்கி நிற்கிறான்.
“இவளும் உன் அன்னையைப் போல். வனதேவி அன்னை!. வனதேவி, குதிரையைத் தேடி வந்திருக்கிறார்கள்.”
“அப்படியா? அது இங்கேதான் முற்றத்தில் வந்து நிற்கிறது. உங்கள் குதிரையா? இந்த வில் அம்பெல்லாம் எதற்கு? அது சாதுவாகவே நிற்கிறது. யாரும் கட்டிப்போடவில்லை.அழைத்துச் செல்லுங்கள்!”
வானவனுக்கு நன்றி செலுத்துபவளாக அரசகுமாரனை அவள் முற்றத்துக்கு அழைத்து வருகிறாள். .
23
“கண்ணம்மா!...” என்று குடிலுக்குள் இருந்து நைந்த குரல் வருகிறது. நைந்திருந்தாலும், அதில் ஒரு தீர்மானம் ஒலிப்பதைப் பூமகள் உணருகிறாள். உடனே உள்ளே செல்கிறாள்.