பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

வனதேவியின் மைந்தர்கள்

முடுக்கியும் நகராம நிக்கிதாம், இல்லாட்டி உதைத்துத் தள்ளுதாம்!” என்று சோமா விவரிக்கிறாள்.

“தெய்வமே!” என்று பூமகள் கலக்கத்துடன் வானைப் பார்க்கிறாள்.

“நம் பிள்ளைகள் யாரும் அதனால்தான் இங்கே வரவில்லையா?”

“எப்படி வருவார்கள் தேவி! இவர்கள் பின்னே தான் அந்தக் குதிரை வருதாமே? நந்தசாமிசுட இருக்காங்க. அதனால் நமக்கு எதுவும் வராது. இப்ப இந்த மாயன் நச்சுக்கொட்டை அம்பு போட்டுத் துரத்துவேன். இல்லாத போனால் இவர்கள் இங்கே புகுந்து நம்மை அழிப்பார்கள் என்று ஒரே குறியில் இருக்கிறான். பாட்டா அடிக்கக்கூட அடிச்சிட்டார். ஏலேய், உன்னுடைய பெண்டாட்டி ரெண்டு பிள்ளைங்க சுகமா இருக்க வாணாமா? ரெட்டையாப் பொண்ணு பிறந்திருக்குங்க. இப்பவே அது முகம் பார்த்துப் பேசுதுங்க. இவ, மரக்கட்ட போல் கிடந்தான். நல்லவளவா, அழகா இருக்கு. நீங்க வந்து புத்தி சொல்லுங்க வனதேவி!” என்று அவள் பூமகளை அழைக்கிறாள்.

அவன் குடிலின் முன் ஒர் அழகிய மரம், வட்டமாகக் கிளை பரப்பி இருக்கிறது. மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்து, அழகாக இருக்கிறது. சுத்தமாகப் பெருக்கிய மண் தரையில், கலயத்தில் நஞ்சு வைத்துக் கொண்டு, மாயன் கூரிய அம்பை இன்னமும் கூரியதாக்கிக் கொண்டிருக்கிறான்.

“வனதேவி. வனதேவி வாராங்க.. டேய், எந்திருந்து கும்பிடு! கால் தொட்டுக் கும்பிடு! அந்த மிதி மண்ணை எடுத்து வச்சுக்க!” என்று அவனுடைய அன்னை நெட்டித்தள்ளுகிறாள். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. கூரிய அம்பு முனையை இன்னும் கூர்மையாக்குவதிலேயே முனைந்திருக்கிறான்.

“உள்ளே வாங்க வனதேவி! வாங்க..” என்று பெண்கள் அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மாட்டுக் கொம்பில் சீப்பு அராவிக் கொண்டிருந்த ஒரு வேடன், நிமிர்ந்து