ராஜம் கிருஷ்ணன்
251
“யாருக்கு யாரும் நிரூபிக்க வேண்டாம்; அவரவர் உள்ளங்களில் விழுந்துவிட்ட நிழலே வதைக்கும். அதையும் நான் விரும்பவில்லை. தேவி, அந்த அரண்மனை வாழ்வு நான் ஏற்க முடியாமல் விட்ட வாழ்வு.”
அப்போது, வேதபுரி மன்னரின் நெடிய உருவம், குடிலுக்குள் தலை வணங்கி நுழைவதைப் பூமகள் காண்கிறாள்.
அவள் முன் தலைமீது கைவைத்து ஆசி மொழிகிறார்.
“மகளே, என்மீது உன் மனத்தாங்கல் புரிகிறது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. உன் மகத்துவத்தை நீ உன் மவுனத்தினாலேயே புரிய வைத்துவிட்டாய். இந்த சத்திய முனிவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.” என்று தழுதழுக்கிறார். o --
“அதற்காகத் தங்கக் கொப்பி போட்ட மாடுகளும் அடிமைகளும் பரிசாக வழங்குவீர்களா என்று கேளுங்கள் முனிவரே!...”
இந்தக் காரமான குரல் எங்கிருந்து வருகிறது என்று திடுக்கிட்டாற்போல் பூமகள் திரும்பிப் பார்க்கிறாள்.
மன்னர் தலை குனிந்து நிற்கிறார்.
“எந்தையே, மகளைப் பார்த்துவிட்டீர்கள் போய் வாருங் கள். நான் தங்களை வருத்தத்துடன் போகச் சொல்லவில்லை. எனக்கு இனி எந்த அரண்மனையிலும் இடமில்லை. தேடித் தேடி வில்லை வளைத் தொடித்த வெற்றி வீரர் என்று கோத்திரம் தெரியாத மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தீர்கள். இத்துணை அவலங்களுக்கும் நானே காரணமாகியிருக்கிறேன். முதலில் பதிநான்காண்டுகள் இப்போது பன்னிரண்டாண்டுகள். எனக்கு உகந்த இடம் இதுவே.”
“மகளே, சக்கரவர்த்தித் திருமகனின் உள்ளத்தை நான் அறிவேன். ஒவ்வொரு கணமும் நெக்குருகிக் கொண்டு இந்த வேள்வியைத் தொடங்கினார். இது நிமித்தமாக, பிள்ளைகள்