பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

வனதேவியின் மைந்தர்கள்

“நாதியம்மா, எங்கள் குரு சொற்படி நாங்கள் நடப்போம். இந்தச் சக்கரவர்த்தித் தந்தையை எங்களுக்குத் தெரியாது! எங்களுக்கு குருசாமிதாம் எல்லாமும்!”

சத்தியமுனிவர் அங்கு வந்து, ‘போய் வாருங்கள். பார்த்து விட்டு வாருங்கள்.” என்று விடை கொடுக்கிறார்.

உடனே எதிர்க்க முடியவில்லை. ஆனால் பூமகளுக்கு மனம் அமைதியிழக்கிறது.

பிள்ளைகளை அனுப்பியது சரிதானா?

இளையவன் உணவு கொள்ளும்போது கசிந்துருகித் கண்ணிர் கலங்க, அவர்களை அழைத்து உச்சிமோந்தான். தான் எடுத்த கனிகளைப் பிளந்து அவர்கள் வாயில் ஊட்டிவிட்டுத் தானருந்தினான். அவளுக்கே நெஞ்சு கசிந்தது. ஆனாலும், அவள் ஏமாந்திருக்கிறாள்; பேதை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறாள். வந்தவர் நேராக இங்கே வரவேண்டியதுதானே? அக்கரையில் நின்றுகொண்டு இளையவனை அனுப்பி எதற்காக நாடகம் ஆட வேண்டும்?

சத்தியமுனிவரும் அவருடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறாரா?.

நந்தசுவாமியின் இழப்புணர்வு இப்போது குழிபறிக்கிறது. துயரம் தாளாமல் வெதும்புகிறாள்.

பெற்றோர் வளர்ப்புத் தந்தை; கணவர்; எல்லோரும் அவளைத் தனிமைப் படுத்தினார்கள். இப்போது இந்தப் பிள்ளைகளும் அவளை அந்நியப்படுத்திவிடுமோ?.

அவள் குடிலுக்குள் சுருண்டு கிடக்கும் முதியவளிடம் சென்ற மருகிறாள். கேகய அன்னை வந்த பிறகு, தன் பொறுப்பை அவளிடம் ஈந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மூலையில் ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறாள்.

“பெரியம்மா..” என்று எழுப்புகிறாள். விழித்துப் பார்க்க வெகுநேரம் ஆகிறது.

“கண்ணம்மாவா? அரண்மனையில் இருந்து எப்போது