பக்கம்:வரதன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|2 வரதன் இவ்விருவரும் சண்டையும் போட்டுக் கொள்வார்கள் ஆல்ை, அச் சண்டை நெடுநாள் நீடித்து நிற்பதில் இவர்கள் சிறிது நேரத்துக்குள் அச் சண்டையினை மு றும் மறந்து பழமைபோல் நண்பராய் இருப்பர். இ கள் இவ்விதம் சண்டையிடுங்காலத்துப் பெரும்பாலு வரதனே முருகனிடம் முதலில் பேசுவான். ஆன அன்று அவன், அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஏனெ னில், முருகன் வரதனை அன்று நன்ருக உதைத்து வி! டான். ஆசிரியரும் அவனைப் பிரம்பினல் நன்ருக அடி) தார். முருகனே, என்றும் அடிபடாத நான் இன்று ஆசி. ரியரிடம் உதைபட்டதோடு பென்சியின் மீது நிற்கவும்: நேர்ந்ததே என எண்ணி யெண்ணி நெடுநேரம் வருந்தினன். வரதன் என்னிடம் வம்பு வளர்த்தமை யால் அன்ருே நான் உதைபட நேர்ந்தது! ஆதலால் அவன் என்னிடம் வந்து 'நான் இனி அவ்விதம் செய்வ தில்லை' என்று பன்முறை மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் : அன்றேல் நான் அவனிடம் பேசுவதில்லை' என்று முருகன் தன் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டான். o வரதனும் முருகனும் ஒருவரோ டொருவர் பேசாம லேயே சிறிது தூரம் சென்றனர். முருகன் தன்னிடம் வலியவந்து பேசுவான் என்று வரதன் நெடுநேரம் எதிர் பார்த்தான். முருகனே அவனைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஆதலால், வரதன் முகம் மிகவும் வாட்டமடைந்தது. முருகனுக்கும் வரதன்மீது அளவு கடந்த ஆசையுண்டு. என்ருலும், அவன் அதனை அச்ச மயம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/19&oldid=891107" இலிருந்து மீள்விக்கப்பட்டது