பக்கம்:வரதன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஒரு புதியவன் மாலை மணி ஐந்திருக்கும்; அப்போது வரதனுக்கு அச்சம் அதிகரித்தது. ஆ | இந்நேரம் முருகன் தன் வீட்டிற்குச் சென்றிருப்பான். ஐயோ! நான் இன்னும் இங்கே உட்கார்ந்துகொண் டிருக்கிறேனே என் தாய் தந்தையர் என்னைத் தேடுவார்களே !’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டே வரதன், தான் இருந்த இடத்தை விட்டு எழுந்தான் ; அந்தப் போக்கிரிகள் என் தொப்பி யையும், பலகை புத்தகங்களையும் பிடுங்கிக் கொண்டார் களே ! நான் நாளைக்குட் பலகை புத்தகங்களின்றி எவ் வாறு பள்ளிக்குச் செல்வேன்’ எனச் சிறிதுநேரம் வருங் தினன். ஆ ! இருட்டிவிட்டால் நான் என்ன செய் வேன்! எவ்விதம் வீடு சேர்வேன் ! ஒ ! கடவுளே ! நீயே எனக்குத் துணைசெய்யவேண்டும் என்று சொல்லி வருந்தி அச்சிறுவன் நாற்புறமும் சுற்றிப் பார்த்தான். வரதனுக்கு வீடு செல்லும் வழி சிறிதும் தெரியவில்லை. ஆதலால் அவன், வடக்கே சிறிது தூரம் சென்ருன் : பின்னர் மேற்கே விரைந்து சென்ருன் , "ஓ ! இது முற்றி லும் புதிய வழி என்று கிழக்கே ஒடின்ை அதுவும் சரியான வழியென அவனுக்குத் தோன்ருமையால் முடி வில் தான் வந்தவழியே திரும்பிச் சென்ருன். வரதன் இவ்விதம் அலேந்துகொண் டிருக்கையில் அவ்வழியில் பல மனிதர்கள் வருவதும் போவ துமாகவே யிருந்தனர். எனினும் அவர்களுள் ஒருவரும், இச்சிறு வன் வழிதெரியாது வருந்துவதைக் கவனிக்கவில்லை. வர தனும் இதை எவரிடமும் சொல்ல விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/27&oldid=891125" இலிருந்து மீள்விக்கப்பட்டது