பக்கம்:வரதன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. காயா-பழமா? நாம் முருகனைக் குறித்து மறந்தேபோைேம் அல்ல வா? அவன் அன்று வழக்கம்போல் பகல் உணவு கொண்டு வரதன் வீட்டுக்கு அருகே வந்தான். முருகன் தான் வரதனை அழைத்து போவது வழக்கம். ஆனல், அன்று அவன் அவ்வாறு செய்ய எண்ணவில்லை. ஏனெ னில், வரதன்மீது முருகனுக்கு இருந்த கோபம் அப் போது முற்றிலும் நீங்கவில்லை. ஆனல் அவனை என்றும் பிரிந்திருக்க முருகன் விரும்பவில்லை. இன்னும் இல ഥങ്ങി நேரமேனும் வரதனுக்குத் தன் கோபத்தைக் காட்ட வேண்டு மென்று முருகன் எண்ணின்ை. ஆதலால் அவன், அன்று வரதன் வீட்டில் நுழையாமலேயே பாடசாலைக் குச் செல்ல லாயினன். முருகன் என்றும் தனியாகச் சென்றதில்லை. ஆத லால் அன்று அவனுக்கு அவ்வாறு செல்வது மிகவும் துன்பமாகவே இருந்தது. அன்றியும் வரதனும் முருகனும் வழியில் உள்ள ஒவ்வொன்றினையும் பார்த்துக்கொண்டும், அவைகளைக் குறித்துப் பலப் பல பேசிக்கொண்டும் அங் கங்கே நின்று நின்று அடிமேல் அடிவைத்து மிக மெது வாகப் பாடசாலைக்குச் செல்வார்கள். அன்று ஒன்றி யாகச் சென்றதால் முருகன் முன்னதாகவே தங்கள் பள்ளியை அடைந்தான். அந்தப் பள்ளிக்கு அருகே சில சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவன் கண்ணன் ன்பவன். அவனும் வரதன், நண்பர்களுள் ஒருவனே. ஆனால், சில நாட்களாக அவன் வரதனிடம் பேசுவதில்லை. னென்ருல் வரதன், கண்ணன், முருகன் மூவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/38&oldid=891148" இலிருந்து மீள்விக்கப்பட்டது