பக்கம்:வரதன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வரதன் 'அடே, அவன் தகப்பனர் மிகவும் கோபக்காரர்' 'போடா, - அதற்கெல்லாம் நம் ஆசிரியர் சிறிதும் அஞ்சமாட்டார். வரதன் இதை வீட்டில் சொல்லியே இருக்கமாட் டான். அப்படிச் சொன்னலும் அவன் தங்தை அவனைத் தான் உதைப்பார்!’ ஆணுல், வரதன் ஏன் வரவில்லை ? அவனுக்குக் காய்ச்சலோ-தலைநோயோ ? அடே, அதிருக்கட்டும் ; நம் ஆசிரியர் அவனை அழைத்துவர ஏன் ஒருவனையும் அனுப்பவில்லை ? அதுதான் எனக்கும் தெரியவில்லை . இவ்விதம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த ஆசிரியர் பாடம் துவங்கியதால் அவர்கள் தம் பேச்சினை அவ்வளவோடு நிறுத்திக்கொண்டார்கள். அன்று, வரப்போவதில்லை எனக் கூறிச்சென்ற கோபாலனையும், கோவிந்தனையும் அவர்கள் தாய் தந்தை யர்கள் உதைத்துப் பாடசாலைக்கு அனுப்பினர்கள். அவர்களைத் தலைமை ஆசிரியர் யாதும் கேட்கவில்லை. கோதண்டனும் அவர்கள் எண்ணியபடி கோள் சொல்ல GHGo?op. வரதன் பாடசாலைக்கு வராதது முருகனுக்கு முத லில் ஆச்சரியத்தையே விளைவித்தது. தான் முன்னதாக வந்துவிட்டதால் வரதனை அவன் தாயார் தனியே அனுப் பவில்லை என்று முருகன் முடிவுகட்டின்ை. பாடசாலை நேரம் முடிந்தது. பிள்ளைகள் அனேவ ரும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், ஒ _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/45&oldid=891160" இலிருந்து மீள்விக்கப்பட்டது