பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடமொழி-ஆரியம்-சமஸ்கிருதம்

97


தொல்காப்பியத்தில் வரும் வட மொழி சமஸ்கிருதத்தைக் குறிக்காது என்றும், தமிழ்நாட்டு வட எல்லையில் வழங்கிய பழந் தெலுங்கையே அது குறிக்கும் என்றும் கொள்வதுவே சிறந்ததாகும்.

'சமஸ்கிருதம்' என்றால் 'செய்யப் பெற்றது' அல்லது 'சொல்லப் பெற்றது' என்று பொருள் உண்டெனக் காண்கிறோம். எங்கே செய்யப் பெற்றது? எவ்வாறு சொல்லப் பெற்றது? என்பன எண்ணற்குரிய. மத்திய ஆசியாவிலிருந்து மேற்கே சென்று ஐரோப்பிய நாட்டில் தங்கிப் பின் பலவாறு பிரிந்து நின்ற பண்டைய மரபினர் தத்தமக்கு வேண்டிய மொழிகளைச் செய்து ஆக்கிக் கொண்டமை போன்று, அதே மத்திய ஆசியாவிலிருந்து ஏறக்குறைய அதே காலத்தில் தெற்கு நோக்கி வந்தவராக வரலாற்றாளர் கூறுகின்ற இப் பழைய இனத்தவர் சிந்துநதி எல்லையில் வந்தபோது புதிதாக ஆக்கிக் கொண்ட மொழியே 'சமஸ்கிருதம்’ என்ற செய்யப்பட்ட, சொல்லப்பட்ட மொழியாகக் கொள்வதில் தவறில்லை. அவரே பின், 'வடவாரியர்' எனக் குறிக்கப்பெறுவாராவார்கள்.

இனி, ஆரியம் என்ற சொல்லைக் காண்போம். சமஸ்கிருதத்திலேயே 'ஆரியம்' என்பது அம்மொழியைக் குறிக்கவில்லை என்பர் அம்மொழியில் புலமை உடைய அறிஞர்கள். தமிழிலும் ஆரியம் என்ற சொல். காலத்தால் பிந்தியே வழங்குகின்றது. வடநாட்டிலிருந்து வந்தவரை ஆரியர் என்றும், அவர் மொழியை ஆரியமொழி என்றும் பிற்காலத்தில் கொண்டனர். எனினும் தமிழில் ஆரியம்' என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உள்ளன. ஆரியன் என்ற சொல்லுக்குப் பெரியோன், ஐயன் அறிவுடையோன், ஆரிய வர்த்தவாசி, உபாத்தியாயன் எனப் பற்பல பொருள்கள் உள்ளன. ஆரியப்பாவை என்ற தமிழ்க்கூத்து நாட்டில் பண்டைநாளில் வழக்கத்தில் இருந்தது. ஆரியம் என்றால் கேழ்வரகு என்ற ஒரு பொருளும் உண்டு. ஆரிய வாசியம் என்பது ஒமத்துக்குப் பெயர். இப்படி மனிதரில்