பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வரலாற்றுக்கு முன்


இரண்டொரு பிந்திய நூல்களில் வரும் குறிப்பைக் கொண்டு எப்படிச் சரி எனக் கொள்ளமுடியும்? அகத்தியர் நீடு வாகிழ்ன்றவர் ஆதலின், அக்காலத்தில் அவர் மறைந்துவிட்டார் என்றும் கொள்ள முடியாது. எனவே, அவர் அகத்தியனாரிடம் தமிழ் பயின்றார் என்பதே பொருந்தாது. உண்மை இதுவாக, அவரையே திரணதூமாக்கினியாக்கி, வடநாட்டிலிருந்து வந்த அகத்தியரே அவருக்குத் தமிழ் பயிற்றுவித்தார் என்ற கதையும் கூறுவது பொருந்தாது. அவருக்கு முன் ‘அகத்தியம்’ என்ற இலக்கணம் இருந்திருக்கலாம். அதில் இரண்டொரு சூத்திரங்கள்கூடப் பின்னால் இன்றுவரை வாழலாம் , ஆனால், அவற்றைக்கொண்டே அந்நூலுடையாரே தொல்காப்பியருக்கு ஆசிரியர் எனக் கொள்ளல் எப்படிப் பொருந்தும்? மற்றும் தொல்காப்பியரை “அகத்தியம் நிறைந்தவன்’ என்னாது, ஐந்திரம் நிறைந்தவன்’ எனவே பாயிரம் காட்டுகின்றது. ஐந்திரமா, ஐந்திறமா என்பது ஆராய்தற்குரியது எனக் கா. சு. பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்கள்[1]. இந்திர வியாகரணம் என்ற நூலே ஆரிய மொழியில் இல்லை என K. சீனிவாசப்பிள்ளை அவர்கள் காட்டுவர். இனி, சிலர் சொல்வது போன்று இவர் ஜமதக் கினியின் மைந்தர் என்பார் கூற்றுப் பொருந்தாது எனவும் இவரே காட்டியுள்ளார்.[2]

இனிப்பாயிரத்தின் வழித் தொல்காப்பிரைக் காணலாம். தொல்காப்பியத்தைக் கேட்ட அதங்கோட்டாசான் என்பவர், “நான்மறை முற்றியவர்’ எனக் குறிக்கப்படுகின்றார். இந் நான்மறை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பார் சிலர். அவை அல்ல என்பதை உரை எழுதவந்த நச்சினார்க்


  1. தொல். எழுத். நச். உரை. முன்னுரை.பக். XXVII. Іbid. р. ХХХІХ.
  2. தமிழ் வரலாறு.K. சீனிவாசப் பிள்ளை.