பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

வரலாற்றுக்கு முன்


இடைச் சங்கப் பாடல்களோ என எண்ணத்தக்க சிலவும் உள்ளன. இங்கு நாம் காண இருக்கும் பாடல்களெல்லாம் கி.மு. நான்காம் நூற்றாண்டில் சிறந்த புலவர்களால் பாடப் பட்டனவாகும்.

................செல்லலொடு
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்
நந்தர் வெறுக்கை எய்தினும் மற்று அவண்
தங்கலர் வாழி தோழி! வெல்கொடித்
துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்
தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்
தென்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்’
(அகம், 251:3-12)

என்றும்,

'புகையிற் பொங்கி வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செய்வரை மானுங் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇ, கங்கை
நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ?
எவன்கொல் வாழி தோழி’
(அகம்:265;1—7)

என்றும் மாமூலனார் பொருள்வயின் பிரிந்த தலைவனை எண்ணி வருந்திய தலைவியைத் தோழி தேற்றிய வகையில் கூறுகின்றார். இரண்டிலும் நந்தர்தம் புகழும் செல்வமும் பேசப்படுகின்றன. நந்தர் தமிழ் மன்னருக்கு நட்பினராய் இருந்தமையாலும், அவர்தம் செல்வம் உண்மையில் அளவிறந்து நின்றமையாலும், அதை எல்லையாக வைத்துப் பேசுகின்றார் புலவர்; ஆனால், உடனே அவரை அழித்த புதியராய் வந்த மோரியர் கொடுமையையும் புலப்படுத்துகின்றார். பழையரான நந்தரைவிடப் பின்