பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வரலாற்றுக்கு முன்



பரங்கொற்றனார் என்ற புலவர், அகம் 69ல் இம் மோரியர் திகிரி திரிதரக் குறைத்த நிலையைக் கூறி அதன் எல்லை கடந்து சென்றவராயினும், பொருள்வயின் சென்ற தலைவர் காலம் நீட்டிக்காது வந்துவிடுவார் எனக் காட்டு கின்றார்.

'விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
அறைஇறந்து அகன்றன ராயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி'
(அகம், 69:10-13)


........................'வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
தின்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் கிலை இய
மலர்வாய் மண்டிலத்து அன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை கின்னே,'
                                      
(புறம், 175)

என்று வேங்கடமலை எல்லையில் வாழ்ந்த ஆதனுங்கன் என்ற மன்னனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடிய பாட்டு அமைந்துள்ளது. இதில் மோரியர் பற்றிய குறிப்பு வருவதைக்காணலாம். எனவே, மோரியர் அல்லது மெளரியர் தமிழருக்குத் தெரிந்தவரே என்பதும், அவர்கள் காலத்தில், அதாவது கி.மு. நான்காம் நூற்றாண்டில், தமிழ் நாட்டவர்கள் செல்வத்தாலும் பிற சிறப்பாலும் மேலோங்கி இருந்ததோடு, இமயம் வரை பல மன்னர்களுடன் நல்லுறவு கொண்டு சிறந்திருந்தார்கள் என்பதும், நந்தர் பரம்பரையினர் இவர்களுக்கு உற்ற நண்பர்களாகவே, அவர்தம் மாற்றார் காலம் பார்த்துக் கோசர்களுக்காக இவர்தம் நாட்டின்மேல் படை எடுத்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றன.

இனி, நம் குறிப்பில் வரும் கோசர் யார்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கும் தமிழ்