பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வரலாற்றுக்கு முன்


கள் கண்டுபிடிக்கப்பட்டு வரலாற்றில் புதுப் புதுத் திருப்பு மையங்களை உண்டாக்குமோ, யார் அறிவார்? காலம் பதில் சொல்லும்.

நாம் இன்று கிடைக்கும் வரலாற்று நிலை பிறழாத சான்றுகளைக் கொண்டு, மிகு பழங்காலந் தொட்டுப் பரந்த இந்திய நாடு-வடக்கும் தெற்கும்-எவ்வாறு இணைந்துள்ளது என்பதை ஒருவாறு எண்ணிப் பார்க்கலாம் என நினைத்தேன். அந்த எண்ணத்தின் அடிப்படையில் எழுந்தவை அடுத்து ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து உருப்பெற்றன. இக் கருத்துக்களே முடிவென்று நான் கூறவில்லை. வரலாற்று ஆராய்ச்சி இவற்றை மாற்றியும் அமைக்கலாம். இன்றைய எல்லையின் வரலாற்றுச் சான்றுகள் நமக்கு அளிக்கும் முடிவுகளே இவை என்ற அந்த அளவோடு அமைதல் பொருந்துவதாகும்.

[1]


  1. பக்கம் 22ல் காணும் தாழிபற்றி புதைக்கும் இடுகாடு பற்றித் தென்னாடும மத்திய தரைப் பகுதியும் இணைந்து குறிப்புகள் தருகின்றன என்பதை, நான் அண்மையில் (1985ல்) இத்தாலி சென்றபோது உரோம்' நகரின் புற எல்லையில் தாழிகள்-பழம் இடுகாடுகள் அமைந்த நிலையினை என் ஏழு நாடுகளில் எழுபது நாடுகள் என்ற நூலில் 74ம் பக்கத்தில் விளக்கியுள்ளேன். இந்த வரலாற்று உண்மை எவ்வளவு தெளிவானது-தமிழக மத்திய தரைக் கடல் இணைப்பு எவ்வளவு உண்மையானது என்பது வெளிப் படையாயிற்று.