பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற்பதிப்பின்

முன்னுரை

அண்மையில் இந்து மாபெருங்கடலை ஆழ்ந்து ஆராய்ந்த எழுபது பேரைக்கொண்ட இரஷியாவின் விஞ்ஞான அறிவுக் குழுவினர் அம்மாகடலின் அடிப்பொருள்களை ஆராய்ந்ததன் பயனாக அங்கே 1000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் (100 Million) நிலப்பரப்பு இருந்ததென்றும், இலங்கைக்குத் தென்கிழக்கில் 550 கல் தொலைவில் ஆழ்கடலில் 10,000 அடி உயர மலை உள்ளதென்றும் முடிவு செய்து அந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். அந்த ஆய்வுக் குழுவின் தலைவராகிய பேராசிரியர் P. பெஸ்ருகெள (Prof. P. Bezrukov) கல்கத்தாவில் 20.2.61ல் இவ்வுண்மையை வெளியிட்டதோடு, கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆழ்கடல் மலைக்கு 15-ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடலில் முதல் முதல் கப்பலோட்டிய இரஷியப் பெருமகனாரின் பெயரையே[1] சூட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.[2] இந்த ஆராய்ச்சியை உலகம் ஏற்று வியக்கின்றது. இத்தகைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுமானால், நம் நினைவில் உள்ள பல உண்மைகள் வெளியாவதோடு, நாம் நினைத்தே அறியாத பலப்பல புது உண்மைகளும் புலனாகும். இமயம் கடலுள் ஆழ்ந்த காலமும், குமரிக்கண்டம் சிறப்புறத் திகழ்ந்த காலமும் உண்டு என்றால் எள்ளி நகையாடிய காலம் மறையத் தொடங்கிவிட்டது. ஆகவே, அறிவியல் ஆராய்ச்சி நன்கு வளர வளர நமக்குப் பல உண்மைகள் தெரியும். அவற்றுள் பல மனித வரலாற்று ஆராய்ச்சி எல்லையைக் கடந்து நெடுந்துாரம் முன்னே சென்று காண வேண்டிய நிலையில் உள்ளன. பரந்த அண்ட கோளத்தின் ஓர்


  1. Afanasy Nikitin.
  2. The Mail (Dally) 22-2-61,