பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்து வெளியும் தென்னாடும்

79


பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்; சிந்து வெளி நாகரிகம் வழிபாட்டு முறையாலும் வேறு பல வகையாலும், திராவிட நாகரிகத்தை ஒத்ததே எனத் திட்டமாகக் குறிக்கின்றார். ஆரியர் இந்தியாவுக்கு வருமுன் இந்தியாவில் முண்டா[1] நாகரிகமும் திராவிட நாகரிகமும் இருந்தன என்றும், அவற்றுள் சிறந்தது திராவிட நாகரிகமே என்றும், வேதங்களில் சொல்லப் பெறாத சிவன், சத்தி முதலியவர்களை வழிபடும் முறைகளால் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமேயாகும் என்றும் எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.[2] ஆரியருடைய சிவ சத்தி வழிபாட்டு முறை, இந்நாட்டில் அவர்கள் நன்கு கலந்து பழகிய பிறகு, இந் நாட்டுப் பழைய சமய அடிப்படையிலே மேற்கொள்ளப் பெற்றதென்பதையும் அவர் நன்கு விளக்குகின்றார்.[3] மற்றும் அவர் ஆரியர் இந்தியாவுக்கு வரும்போது திராவிடர் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தனர் எனக் குறித்து, கிரேக்க நாட்டு ஹெலன் காலத்துக்கு முன்பே தமிழர்கள் சிறந்திருந்தார்கள் எனவும், சேர சோழ பாண்டிய நாடுகள் சிறக்கத் தெற்கே ஓங்கி இருந்தன எனவும், கிரேக்க நாட்டு ஹெரடோட்டஸ் அவர்களைப் பற்றிக் குறிக்கின்றார் எனவும் காட்டுகின்றார்.[4] ஹெலன் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டதாகும் என்பர் ஆராய்ச்சியாளர். எனவே, தென்னாட்டுப் பெரு மன்னர்களாகிய மூவேந்தர்களும் சிந்துவெளி நாகரிகக்

  1. Munda.
  2. Political History of india, P. 88.
  3. Siva and his Sakti do not appear in the Vedas, but only in more recent texts from a period when new religions were being formed by fusion of indigenous cults with the Vedic and Brahminical belief. (Political History of India, p. 87)
  4. Pre-Hellenic iage of Greece.