பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 அருண்மொழித் தேவனுக்கேற்பட்ட சிறப்புப் பெயர்கள் பலவற்றுள் இராசராசன், மும்முடிச்சோழன். என்பவை: சில. இம் மன்னனின் சில படைத் தலைவர்கள் உள்ளத் தாலும், புறத்தாலும் இவ்வரசனுக்குரியவர்கள் என்பதைப் புலப்படுத்த மும்முடிச்சோழ", என்ற கெளரவப் பெயரை ஒட்ட வைத்துக்கொண்டனர். தஞ்சை இராசராசேச் வரத்துத் திருச்சுற்று மாளிகையைக் கட்டியவன் படைத் தலைவனான மும்முடிச்சோழ பிரமாதிராயன்தான் அங்கம்பாக்கத்தருகேயுள்ள திருமுக்கூடலில், தனக்குச் சிவபக்தியூட்டி வளர்த்த பாட்டி செம்பியன்மாதேவி பெயரால், மன்னன் இராசராசன் திருமண்டபம் நிறுவி யதைக் கண்ட இப்பிராந்தியப் படைத் தலைவன் மும்முடிச் சோழ வாணப்பேரரையன் அவகால மல்லன், வாணிசுவரர் ஆலயத்திற்கு ஒளி ஊட்ட வழி செய்தான் என்பதையே தூண்களின் சாசனம் செப்பும். இக் கோயில் குலோத். துங்கன் காலத்தே செப்பனிடப்பட்டது; சடையவர்மன் சுந்தர பாண்டியன் காலம் வரை சுமார் நான்கு நூற்றாண்டுகள் பீடுடன் விளங்கியதை அறிகிறோம். தினம் இரண்டே குடம் நீர் திருமஞ்சனத்திற்களிக்க ஊதியமாக 96 குழி நிலம் மான்யமாய் விடப்பட்ட தென்றால், அக்காலத்தில் தேவ கன்மிகள் பணி எவ்வாறு போற்றப் பட்டது என்பதும் விளங்கும். மேற்கேயுள்ள பெரிய கோயில்தான் இப்பொழுது அம்பலவாண ராலயமாயுள்ளது. இரண்டு பெரிய: பிரகாரங்கள் கொண்டு இரு நுழைவாயில்களுடன் விளங்கு கிறது. மேற்கு உட்பிராகாரத்தில் தனி அம்மனாய் வீற்றி ருக்கும் சிவகாமி விக்கிரகம் எழில் வாய்ந்தது. சிவனின் காமி என்றாலே எழில் வடிவினளாய்த்தானிருக்க. வேண்டும். அத்துடன் சுந்தரி என்ற அடைமொழியும் சேர்ந்து சிவகாம சுந்தரி என்ற பெயர் கொண்டுள்ளாள். அழகுப் பிழம்பு என்றுதான் கூறவேண்டும்.