பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தில்லையில் பல்லவசிம்மவர்மன் ஆதித்தசோழன், குலோத்துங்க சோழன் இருவர், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இப்படிப் பல மன்னர்கள் போட்டியிட்டு பொன் வேய்ந்து பொன்னம்பலவாணனாக்கினர். அதன் அருகிலேயே சித்ரகூடமென்று பெருமாள் கோயிலையும் நிறுவி, தெற்றியம்பலமாக்கிப் பல்லவனும் வழிபட்டான். பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து கடை மன்னவன் பல்லவன் கோன் பணிந்து' என்பது பெரிய திருமொழி. அதேபோன்று இங்கும் சிவனுக்கும் பெருமாளுக்கும் உரிய அம்பலங்கள் கிலமாகிவிட்டன. அக்கால மூர்த்திகள் அதிர்ஷ்டவசமாய் நல்லபடியாக யுள்ளன. எல்ல்ோருக்கும் உண்டு இலையும் பழுப்பும் என்பது பழமொழி. அதை நிதர்சனமாக இங்குக் காண் கிறோம். சிறிது சிரத்தை ஏற்பட்டாலே போதும்; கோயில் உன்னத நிலை எய்தும். ċFİD iLl உணர்ச்சியையும் கலையார்வத்தையும் மாத்திரம் பெருமையாகக் கொண்டதல்ல இவ்வூர். இலக்கியப் -புலமைக்கும் வித்திட்டது. இம்மண். தமிழ் அறிஞர் பரமசிவானந்தம் இவ்வூர்க்காரர்தான். நன்றியுடன் (தினமணிச் சுடர்) –25-3-1979