பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லையும் அங்கம்பாக்கமும் (தில்லை கும்பாபிடேக மலர் 1979) அ. மு. பரமசிவானந்தம் என்னை நான் உணராத அந்த இளமைக்காலம்; நான் எங்களுர் ஆரம்பப் பள்ளியில் பயிலத் தொடங்கிய, இளமைக்காலம். அப்போது எங்கள் வீட்டின் பின்பக்கத், திலேயே உள்ள அம்பலவாணர் கோயிலுக்கு அடிக்கடி செல்லுவேன். மாலையில் பாலாற்று மணலில் விளையாடி விட்டு, ஊற்றுநீர்க் கால்வாயில் துப்புரவு செய்து கொண்டு. அப்படியே கோயிலுக்குச் சென்று அம்பலவாணரையும் அன்னை சிவகாமியையும் தரிசனம் செய்துகொண்டு வீடு: திரும்புவது வழக்கம். மாலைவேளை அபிடேக ஆராதனை அனைத்தும் என் பாட்டனாரால் மானியம் விடப்பெற்று நடத்தப்பெறுவதாகும். எனவே ஆராதனை முடியும். மட்டும் இருந்துவருமாறு என் அன்னை பணிப்பார்கள். அந்த மாலை ஆராதனையின் முடிவில் அர்ச்சனை செய்யும் போது வயது முதிர்ந்த ஐய்ர் சிவகாமி அம்பாள் சமேத. சிதம்பரேஸ்வர சுவாமி நம என்று கூறி முடிப்பார். என் பிஞ்சு உள்ளம் அதைப்பற்றி அன்று பெரிதாக எண்ணா விட்டாலும், அம்பலவாணர் என்று சொல்லாமல் வேறு பெயரைச் சொல்லுகிறாரே என நினைக்கும். பிறகு சில: ஆண்டுகள் கழித்து -சற்றே தெளிவு வந்த பின் அம்பல: