பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தூரத்தே இருந்து தரிசிக்கச் சிதம்பரத்தைப் போன்று தூல. பிங்கங்கள்ாகிய கோபுரங்கள் பெரும் அளவில் இவ்வூரில் இன்றெனும், பாலாற்றங்கரையில் தென் பக்கத்தில் ஆற்றின் கரைமேலேயே அழகுற இக்கோயில் அமைய, ஆற்றின் வடகரையினை ஒட்டிச் செல்லும் சாலையிலும், இருப்புப்பாதையிலும் செல்வார் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் சிறந்துள்ளது. இவ்வூரின் வடக்கே பாலாறும் தெற்கே சேயாறும் பாய்ந்தோடி, கிழக்கே ஒரு கல் தொலைவில் திருமுக்கூடலில் கலக்க, இவ்வூர் மடுவும் அவற்றொடு கலந்து முக்கூடல் என்ற பெயரை உண்மை யாக்குகின்றது. இந்த நிலையினை எண்ணித்தான் போலும் சோழர்குல மக்களும் அவர்தம் உயர் அதிகாரி களும் இந்த இரண்டு ஊர்களிலும் ஆலயப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்தனர் என நினைக்க வேண்டி யுள்ளது. - - - எனவே இவ்வூர் தொன்மைவளம் சான்றதோடு, தெய்வமணம் பரப்பும் வரலாற்றுப் பின்னணியும் கொண்டு. தில்லையை ஒத்து விளங்குகிறது. தில்லையைச் சுற்றியுள்ள இயற்கைவளம் இங்கும் உண்டு. வாழை, தென்னந்: தோட்டங்களும் அடுத்து வயல்வெளியும், இவ்வயல் வெளிக்கு நீருட்டும் வாய்க்கால்களும் இங்கு வருவோருக்குச் சோழநாட்டையும் சிறப்பாகத் தில்ல்ையையும் நினை ஆட்டும் என்பது உறுதி. . - - இவ்வாறு வடதில்லை எனப் போற்றத்தக்க இந்த அங்கம்பாக்கம் இயற்கையொடு இறைநலமும் சார்ந்த, ஒருர் என்பதும், தொன்றுதொட்டு வேளாண்மக்கள் வாழ்ந்து வருகின்ற ஊர் என்பதும், தற்போது ஓரளவு ஒளி' மழுங்கி இருந்தபோதிலும் உள்ளவர் ஒன்றுபட்டுச் ச்ெயலாற்றின் உயர்ந்து ஓங்கிப் பண்டை நலம் பெறும். வாய்ப்பு உள்ளது என்பதும் அறிந்த உண்மைகளாகும்: தில்லையினைப் போன்றே இவ்வூரும் எல்லா நலன்களையும். பெற்றுச்சிறக்க என்ற வாழ்த்தோடு அமைகின்றேன்.