பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழ்நாட்டு வரலாறு இன்றுவரையில் செம்மையாக எழுதப்பெறவில்லை. நிலத்தின் கீழும், நீரின் கீழும் புதைந்தும் ஆழ்ந்தும் உள்ள பொருள்கள் கண்டெடுக்கப் பெறின். தமிழகத்தின் தொன்மை உலகுக்கு விளங்கும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திய பழம்பெரும் தமிழர் நாகரிகம் உலகுக்கு விளங்கும். அப்படியே ஊர் தொறும் அமைந்த பழங் கோயில்களில் அமைந்த சிலைகள், கல்வெட்டுக்கள், கலை அமைப்புக்கள் இவை களைப் படி எடுத்து ஆராயின் ஊர்களின் தொன்மையும் வாழ்வும் வளமும் பிற சிறப்பியல்புகளும் நன்கு விளங்கும். உண்மையில் இவையே தமிழனுக்குப் பிற பொன் புன்தயல் முதலியவற்றைக் காட்டிலும் சிறந்த புதையலாகும். இந்த நூலில் அங்கம்பாக்கம்’ என்னும் சிறிய ஊரில் கண்ட வரலாற்றுப் புதையலின் ஒரு சிறு பகுதியே காட்டப் பெறுகின்றது. கல்வெட்டுக்களின் வழியே பலப்பல உண்மைகள் புல்னாகும் அரசாங்கமும், ஆய்வாளர்களும், இந்து சமய அறநிலையத்தவரும் இத்துறையில் கருத் திருத்த வேண்டும். - சென்ற நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பெற்று, இறுதி யாண்டில் - கி. பி. 1900-ல் - இன்றைக்கு எண்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப் பெற்ற அங்கபுரத்து அம்பலவாண மாலை இன்று (6.7.1986) மறுபடி வெளி: