பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வருங்கால மானிட சமுதாயம்


முறைகளும் தன்மைகளும் உறவுகளும் என்றும் இருந்து வந்ததைப் போலவே இன்றும் இருந்து வரும். மக்கள் இயற்கை முறைகளைப் புறக்கணித்து விட முடியாது; மேலும் அவர்கள் அவற்றுடன் முற்றிலும் பொருந்தித் தான் செயல்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் தமது குறிக்கோள்களை விரைவாகவும் முழு உறுதியாகவும் எய்த முடியும்.

புராதன காலக் கிரேக்கர்களின் அரிய வியப்பான கதையொன்றை நினைவு கூர்வோம். துரோஜன் போரின் மாபெரும் வீரனான அக்கிலசிஸ் மீது கோபம் கொண்ட அப்பாலோ, அக்கிலஸின் குதியங்காலில் தைக்குமாறு பாரீசின் அம்பை ஏவச் செய்தான் அந்தக் குதியங்கால்தான் அக்கிலசின் உடம்பில் காயப்படக் கூடிய ஒரே இடமாகும்.

கிரேக்கர்கள் தலைவிதியையும் தெய்வத் தீர்ப்பையும் நம்பினர். எனினும் அவர்களது பல தொன்மக் கற்பனை களிலும் கதைகளிலும், மனிதர்கள் மட்டுமல்லாமல் கடவுளர்களும் கூடச் சமயங்களில் புற நிலைத்தன்மை களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது என்ற கருத்தும் தலை காட்டுகிறது. கற்பனவுவுலகில் கூறப்படும்போது, இயல்பான தொடர்புகளும் தன்மைகளும் பெரும்பாலும்"அக்கிலசின் குதியங்கால்" வடிவத்தையே பெற்று விடுகின்றன.

இயல்பு முறைகளை அடக்கியாளவும் அவற்றை மாந்தனுக்குப் பணியாற்றச் செய்யவும் வேண்டுபென்றால், முதலில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதைத்தான் அறிவியல் செய்கிறது.

கருத்துகள், ஊகங்கள், கொள்கைகள் ஆகியவை யெல்லாம் இயற்கை முறைகளோடு பொருந்தியிருந்தால்