பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வருங்கால மானிட சமுதாயம்


வகுப்பை, அனைத்து ஒடுக்கப்பட்ட பாடு படும் மக்களை ஒன்று படுத்துவதற்கும், அவர்களது நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும், அவர்களை மேலும் காரிய வீரர்களாக்குவதற்கும், பாட்டாளி வகுப்பு தனது அரசியல் கட்சியை - முன்னேறிய சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, உணர்வு மிக்க உழைப்பாளி வகுப்புப் பகுதியை நிறுவுகின்றது

பொதுவுடைமை இன்றுள்ள நிலையும்

எதிர்கால நிலையும்

பொதுவுடைமை பற்றிய மார்க்சியக் கொள்கையானது சமுதாயத்தையும் அதன் வளர்ச்சியை யையும் பற்றிய அறிவியல் பொதுவுடைமைக் முதன்மையாளர்களால் வரைந்து காட்டப்பெற்ற வருங்கால சமுதாயச் ஒவியமாகும் பொதுவுடைமை மாற்றத்துக்கான தேவைக் கூறுகளைத் தோற்றுவிக்கும் நடைமுறை வகையிலான தற்கால வளர்ச்சிப்போக்குகளின் ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்ததாகும்

ஆனால் அது கற்பனை வாழ்வியல் ஆயிற்றே! - என்று அறிவியல் பொதுவுடைமையின் இன்றைய விரோதிகள் கூறுகின்றனர் எதிர்காலம் அறிவியலுக்குரிய செய்தியாக முடியாது என்பது அவர்கள் கருத்து

ஏன் முடியாது என்று நாம் வினவுவோமா? வானியலில் யாரேனும் எந்தக் கற்பனைக்கோட்பாட்டையேனும் காண்கிறார்களா? வானியல் வானமண்டலத்திலுள்ள கோள்களும் விண்மீன்களும் பல்லாண்டுகளுக்கு, ஏன் நூற்றாண்டுகளுக்கு அப்பாலும் எந்தெந்த இடத்தில் இருக்கும் என்று முன் கூட்டியே கூறும்போது, அதுவும்கூட எதிர்காலத்தை ஆராய்கிறது என்பது தானே உண்மை. இவ்வாறு கூறக்கூடிய இயற் பாடும், நடைமுறையில் இறும்புதுடன் மெய்மையாகியுள்ள