பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

71


இந்தத் தேவைகள் நிறைவு செய்யப்படும்போது, இவை மேன்மேலும் பல தேவைகளைத் தோற்றுவிக்கும் என்ற காரணத்தால், பொதுவுடைமை விளைவாற்றலின் எல்லையற்ற வளர்ச்சிக்கும், பொதுவுடைமை சமுதாயம் முழுமையின் வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகளை உருவாக்கும் மேலும், விளைவாக்கம் வளர வளர, உழைப்பின் ஆக்க ஆற்றல் பெருகப் பெருக, பொருளியல்ச் செல்வத்தை விளைவு செய்வதற்குத் தேவைப்படும் கால அளவும் குறையும்; அதன் மூலம் மனிதனின் அனைத்து படைப்பாற்றல்களும், உண்மையிலேயே உரிமை வளர்ச்சி பெறுவதற்கான நிலைமைகள் உண்டாகும் இதனால், பொதுவுடைமையின் கீழ் சமுதாயச் செல்வம் அதற்குத் தேவையான வேலை நேரத்தின் அளவைக் கொண்டு மதிப்பிடப் பெறமாட்டாது, மாறாக, ஓய்வுக் காலத்தின் நீளத்தைக் கொண்டு - தாமசு மூர் சிந்தித்ததுபோல், மனசு வளர்ச்சிக்கான நேரத்தைக் கொண்டு-மதிப்பிடப் பெறும்

பொதுவுடைமை மக்களுக்கான சமுதாயமாகும்; மேலோர்களுக்கான சமுதாயமன்று,எல்லொருக்குமான சமுதாயமாகும் ஒவ்வொரு தனி ஆளின் உரிமை வளர்ச்சியும் அனைத்து மக்களின் வளர்ச்சிக்கான தேவைக் கூறாகும்

சுருங்கச் சொன்னால் பொதுவுடைமை வகுப்புகளற்ற சமுதாயமாக இருக்கும், அனைவருக்கும் மிகு வளம் வழங்கும் சமுதாயமாக, புதிய ஒழுக்க நெறியாலும் கூட்டுறவு நிலையாலும் ஆளப்படும் சமுதாயமாக, ஒவ்வொருவரின் எல்லையற்ற முன்முயற்சியை உறுதிப்படுத்தும் சமுதாயமாக இருக்கும் இதுதான் பொதுவுடைமை பற்றிய பொதுவான ணணையாகும்; இதற்கு மேலும் அதன் நுணுக்க வரங்களை முன்கூட்டியே சொல்லப் புகுவது கற்பனை பாத்திரமாகவே முடியும்