பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வருங்கால மானிட சமுதாயம்


வரையில்தாதன். மற்றவற்றைப் பொறுத்தவரையிலோ, முதலாளிய வணிகர்களுக்கு மாந்தன் ஒரு பொருட்டே அன்று. நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போலவே இன்றும் பகிர்வு முதலீட்டின் அடிப்படையில்தான் இருக்கிறது; வருவாயே ஆக்கத்தின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.

முதலாளியத்தின் "நாகரிகப்படுத்தும் கடப்பாடு" பற்றி என்ன சொல்கிறீர்கள்! - என்று முதலாளிய ஒத்துழைப்பாளர்கள் கூக்குரலிடுகிறார்கள். முதலாளியம் பிற்பட்ட மக்களுக்கு நாகரிகத்தைக் கொண்டு வருகிறதாம்.

ஆனால் தனி வல்லாட்சி அளித்த "கொடை வளங்கள்" என்ன? இந்தக் "கடப்பாட்டின்" "பலன்கள்" யாவை? வறுமையும், கல்லாமையும், குடியேற்ற நாட்டு மக்களுக்குத் "நிலை கெட்டவர்கள்" என்று சூட்டிய பட்டமும்தான் கண்ட பயன். நியூ கினியா விலுள்ள பாப்புவன் மக்கள் இன்னும் கற்காலத்திலேயே வாழ்கின்றனர்; தாசுமேனியர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். வட அமெரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் மிஞ்சியுள்ள பழங்குடிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க தனி வல்லாட்சி கடுமையாகப் போராடுகிறது. மொசாம்பிக்கிலும் அங்கோலாவிலும் ஏனைய குடியேற்ற நாடுகளிலுமுள்ள 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பேருக்குக்கூடச் உரிமையைப் பெற்றுவிடவில்லை. அரசியல் விடுதலை யைப் பெற்றுவிட்ட மக்களும் கூட (அவர்கள் பெற்ற இந்த வெற்றிகளே மிகவும் அரும்பாடுபட்டுப் பெற்றவைதான்!) முற்றிலும் நம்பற்கரிய பொருளியல் தொல்லைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர், இதுதான் குடியேற்றவல்லாண்மையர் செய்த தொண்டு. ஆசிய-