பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

93


காரக் குணத்தையோ மாற்றிவிட முடியாது. தனிவல்லாதிக்கம் இருக்கின்ற வரையிலும் அதன் முறைகளும் தொடர்ந்து செயல்பட்டு வரத்தான்் செய்யும்.

சமுதாய வளர்ச்சி ஒரு தாழ்ந்த கட்டத்திலிருந்து உயர்ந்த கட்டத்துக்கு, முதலாளியத்திலிருந்து பொதுவடைமைக்குச் செல்லும் இயல்பான தேவையை வரலாறு அழிக்கவும் இல்லை; அதனால் அழிக்கவும் (ԼՔւգ-Ամո Փ1. மேலும் கடந்த பல ஆண்டுகள் தனிவல்லாதிக்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்துள்ளன; இந்த மாற்ற முடியாத நிகழ்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளன. உண்மையான உரிமையையும், நட்பமைதியையும், சமுதாய சமத்துவத்தையும், வளமான வாழ்வையும் உறுதி செய்யும் ஒரு புதிய சமுதாயத்தை - பொதுவுடைமை சமுதாயத்தை - கட்டியமைப்பதற்காக துன்ப துயரம் மலிந்த வறுமைப் படுகுழியிலிருந்து மாந்தகுலம் கரையேறி வந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய மேம்பாடு

போர்ப் பிற்கால ஐம்பதாண்டுகள் 75 புதிய தனியாட்சி அரசுகளின் தோற்றத்தைக் கண்டுள்ளன. குடியேற்ற ஆட்சியிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக் கொண்டுவரும் மக்கள் புதிய புதிய வெற்றிகளை ஈட்டி வருகின்றனர்.

விடுதலைவாழ்வு பெற்ற முதல் மாதங்களும் ஆண்டுகளும் செல்ல செல்ல, தனிவல்லாண்மை வாணர்கள் தமக்கு விட்டுச் சென்றுள்ள பொருளியல், பண்பாட்டு மரபு தமது தேயம் செம்மைபெற ஒரு தடையாக உள்ளது என்பது அந் நாடுகட்கு மேன்மேலும் தெளிவாகின்றது. பெற்ற விடுதலை வெறும் மாயைத் தோற்றம்போல் கரைந்து மறைந்து போகாது தடுக்கவும், குடியேற்றவல்லாண்மை புதியதொரு வடிவில் குடி-