பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

95


விலங்குகள் வாழ்ந்து வந்தன; மாந்தனின் உயிரியல் படிமுறை வளர்ச்சிக் கட்டங்களில் இவையும் ஒன்றாக இருந்தன. ஆனால் அவை அழிந்து மறைந்து போயின; இனி எதுவும் அவற்றைத் திரும்பக் கொண்டு வர இயலாது.

எனவே மாந்த குலம் முன்னோக்கிச் செல்லும் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. மனித வரலாற்றின் தொல்லைப் பழங்காலத் தொடக்கத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட மிகவும் பெருமை பாராட்டப் பெற்ற, அந்தப் "பொற்காலம்" ஒரு கட்டுக் கதையைத் தவிர வேறில்லை, அதனைக் கற்காலம் என்றுதான்் சொல்ல வேண்டும்; அக் காலம் மனிதனுக்குப் போதுமான உணவைக் கூட வழங்க முடியவில்லை. அதன்பின் அடிமைக் காலம் இருந்தது; நிலக்கிழமை இருந்தது; அதன்பின் முதலாளியம் இருந்தது; இப்போதும் இருக்கின்றது; பொதுவுடைமையும் இருக்கிறது; இருக்கவும் செய்யும்.

புதிதாக விடுதலை பெற்ற அரசுகள் முதலாளிய வளர்ச்சிப் பாதையை மேற்கொள்வதன் மூலம் என்ன எதிர்பார்க்க முடியும்? சிலருக்கே செல்வம்; வெகுமக்களுக்கோ ஈவிரக்கமற்ற சுரண்டல்; கொடிய வறுமை - அவ்வளவுதான்். தேசிய முதலாளிகள் அயல்நாட்டு முதலாளிகளைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைவிாக உழைக்கும் மக்களை ஒடுக்க வில்லை. தனது கொள்ளைக்கார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அந்த முதலாளி வகுப்பு, நாட்டுக்கிரண்டகம் புரியக்கூடத் துணிந்து விடுகின்றது. காங்கோவில் அண்மையில் நடந்த நிகழ்ச்சிகள் இதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டாகும். மேலும் இதைப்போல் வேறுபல சான்றுகளும் கூறலாம்.

சமுதாய அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், முதலாளிய வளர்ச்சிப் பாதை உண்மையில் குடியேற்ற வல்லாண்மையே புதிய பெயரில் திரும்பக் கொண்டு வருகின்றது.