பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

13


படங்கள் வரைந்து அலுத்த பேனாமுனைகளும், சபித்துச் சலித்துப்போன திருவாய்களும், கனல்கத்திக் கருகிப்போன விழிகளும், சுருக்குக்கயிறு வீசிச்சோர்ந்து போன வலைவீசிகளும், படுகுழிவெட்டி ஆயாசமடைந்த அரசியல் வெட்டியான்களும் இன்று,சர் சண்முகம் அறிஞர் உலகிலே அரசு ஓச்சக்கண்டு, அயர்கின்றனர். ஒருகாலத்திலோ! ஏ, அப்பா! எவ்வளவு கேலி கிண்டல், என்னென்ன வசவுகள்! இவ்வளவுக்கு மிடையே பூத்தமலர், அதனை, வளமிகுந்த வங்கத்திலே வாஞ்சனை எனும்நீர் பெய்து வளர்த்த தாகூரெனும் மலருடன், ஏன் ஒப்பிடவேண்டும்? சர் சண்முகம், தமிழர்; பண்டைத்தமிழரை, தமிழ்வீரரை, நினைவூட்டும் தமிழர். வேறு உவமைகள் ஏன்?

அவர் அன்று ஆற்றிய அறவுரை, அகநானூற்று கவியை, எனக்கு நினைப்பூட்டுவானேன், என்று மீண்டும்கேட்பீர். நான்கூறுமுன்னர், நீவீர் சற்று எண்ணிப் பாருமின்.

இந்தத் திங்கள், பல்வேறு இடங்களிலே பட்டமளிப்பு விழாச்சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன. டாக்டர் ஜெயகர், பேராசிரியர் ஜா, பண்டித குன்சுரு முதலிய அறிஞர் பலர், வடநாட்டிலே, பட்டமளிப்பு விழாச் சொற்பெருக்காற்றினார்கள். படிப்பிலும் பாராளுந் திறனிலும்,மேலானவர்களான மேதாவிகள், தேசீய சர்க்காரின் அவசியத்தைப் பற்றியே பெரிதும் வலியுறுத்திப் பேசினர். தேசீயம், ஏன் இங்கு சரியான முறையிலே கமழவில்லை என்ற ஆராய்ச்சியிலேயோ அவர்கள் புகவில்லை. ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பது எளிது; கண்டிக்கவேண்டிய