பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

17


வளவு! இறுமாப்புடன், அக்கூட்டம், தனது "தாசராக" மற்றவரை மாற்றிய கொடுமையை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் அறிஞர் சண்முகத்தின் அறவுரையின் அழகு புலனாகும். இதோ வெளிப்படையாகவே வீரர் சண்முகம் விளம்புகிறார் கேளுங்கள்.

"இந்தியாவிலே வர்ணாசிரமம் ஏற்பட்டதனால், ஆளும் ஜாதி தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஏகபோக உரிமையாக அந்த அதிகாரத்தை அனுபவித்து வருகிறது. இந்த வகுப்பு, தனது ஏக போக உரிமையையும் பேராசையையும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகக் கைவிடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு துரிதமாக இந்தியாவுக்குச் சுதந்தரமும் ஜனநாயகமும் ஏற்படும்."

விடுதலை வீரர்களே! ஆசிரம அரசியவிலே அர்ச்சகராக உள்ள அருமைத் தோழர்களே! ஆகாத திட்டத்தைச் சுமந்து கொண்டு ஆமை வேகத்திலே செல்லும் அந்தணரின் அடிவருடிகளே! நாட்டை மீட்டிட நானாவிதமான முயற்சிகள் செய்தீர், அலுத்தீர், முடக்குவாத நோயால் வாடுகிறீர். இதுகாறும் செய்த பல, வெற்றி தரக்காணோம். வீணருக்கு அரசியலிலே உறைவிடமும், சுயநலமிகளுக்குச் சமுதாயத்திலே புகலிடமும் தரவே, உமது தொண்டு பயன்பட்டது. இதோ எமது தலைவர் இயம்பிடும் திட்டத்தைப்பற்றி யோசியுங்கள். விடுதலைப் பாதையை அடைத்துக் கொண்டுள்ள மமதையாளர்களை, மட்டந்தட்ட முன்வாருங்கள்,

பாருங்கள் பிறகு, பரிதிபோல் விடுதலை தோன்றிடக் காண்பீர். சர் சண்முகம் ஏகபோக மிராசுபாத்யதை

673-2