பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வர்ணாஸ்ரமம்


அனுபவிக்கும் கூட்டத்திற்கு நன்னெறி புகல்கிறார். பேராசையை ஒழிமின்! எல்லாம் எமக்கே எனும் இறுமாப்பை, நீக்குமின்! என்று இதோபதேசம் புரிகிறார். காடியிலே பன்னீர் தெளித்துப் பயனென்ன என்பீர். ஆம் ! இதோபதேசத்தோடு நின்றுவிடவில்லை, இளங்கோ மன்றத்திலே இருந்தாண்ட வீரர். தாங்களாகப் பேராசையை விடவில்லையானால், என்ன நேரிடும் ? இந்த நிலை இப்படியே, என்றென்றும் நீடித்திருக்கும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். ஜனநாயக வேகம் இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை ஒழித்துவிடும் என்ற உண்மையை உரைத்திருக்கிறார். ஆம்! இது சரிதங்கண்ட உண்மை. கிரேக்கநாட்டு ஹெலாட்களைப் (Helot) பலகாலம் அடக்கி வைத்திருந்த ஆண்டைக் கூட்டம் (Masters) அழிந்து போனது சரிதம் ! ரோம்நாட்டு பிளபியன் (Plebian), பெட்ரீஷியன் (Patrician) தகராற்றின் முடிவு என்ன? ஆதிக்கம் செலுத்தியகூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது. பிரிட்டனிலே காமன்ஸ் (Commons)பிரபுக்கள் (Lords) தகராற்றின் முடிவு என்ன? பிரபுக்கள் பெட்டிப் பாம்பு ஆனதுதானே ! ஆண்டவனால் ஆளப் பிறப்பிக்கப் பட்டவன் என்று ஆணவமாகப்பேசி (Divine Right of Kings) கடவுட் புதல்வர்கள் என்ற தத்துவத்தைப் பேசிய, முதலாம் சார்லஸ் மன்னனின் முடியும் முடிதரித்த சிரமும், என்ன ஆயிற்று ரஷியநாட்டிலே? முதலாளி (பூர்ஷுவா) தொழிலாளி (புரோலோடேரியன்) போர் மூண்டதன் பலன் என்ன? இங்குமட்டும் என்ன? ஆரிய திராவிடப்போர் மூண்டுவிட்டது. சரிதமுணர்ந்தோரின் உள்ளத்திலே, இதன் முடிவு என்ன-