பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

19


வாக இருக்கும், என்று தெரியும்! குடிலர்கள் கெடுவர்!! சழக்கர் சாய்வர் ! இத்தகைய வீர உரையாற்றிய சர் சண்முகத்தைப்பாராட்டுவதோடு நின்றுவிடக்கூடாது. எந்த ஏகபோகமிராசு ஒழிக்கப்படவேண்டும் என்று சர் சண்முகம் கூறினாரோ, எந்த வர்ணாஸ்ரமம் ஒழிய வேண்டும் என்று அவர் கூறினாரோ, அதனை ஒழிக்க மாணவர்கள் முயலவேண்டும், முனையவேண்டும்.இல்லையேல் அவர் மொழிகேட்டு யாது பயன் !

" எல்லாம் சரி, பரதா! நாங்களும் சர் சண்முகத்தின் பேருரை கேட்டுப் பூரித்தோம். ஆதிக்கம் செலுத்தும் இனம் பிரமித்தது. ஆனால் அவருடைய சொற்பொழிவுக்கும், உனக்கு அகனூற்றுச்செய்யுள் நினைவிற்கு வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியக்காணோமே" என்றே அன்பர்கள் கேட்பர்.

தோழர்களே! சர் சண்முகம் தமது சொற்பொழிவின் இறுதியிலே, (வர்ணாசிரமம் ஒழியவேண்டும்! ஒரு இன ஆதிக்கம் அழியவேண்டும்! ஏகபோக உரிமை மடியவேண்டும் ! பேராசைப் பித்தம் போக வேண்டும்!) என்று முழக்கமிட்டாரே, அந்தப் பகுதி, என் செவிக்கு, 'தேரை விரைவாகச் செலுத்துவாய் பாகனே !' என்று தலைவன் கூறும் செய்யுள் போன்றிருந்தது. சர் சண்முகம், வர்ணாசிரம ஒழிப்புக்காகவே வாழும் கட்சியை விட்டுப்பிரிந்து, வேறு வினையில் ஈடுபட்டு, நெடுநாட்கள் பிரிந்திருந்தார். அவர் பிரிய நேரிட்டதால் திராவிடக் கட்சி தவித்துக் கிடக்கிறது. காவல்மிகுந்த மனையிலே கன்னி நிற்பதுபோல, வினைமுற்றிய தலைவன், விரைந்து சென்று தலைவியின் துயர் தீர்த்தல்போல சர் சண்முகம், தன் நெஞ்ச-