பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வர்ணாஸ்ரமம்


மெனும் பாகனுக்குத் தேரை விரைந்து செலுத்து எனக் கூறுமாறு வேண்டுகிறோம். துயிலும் பெண்மானருகே ஆண்மான் நின்று காவல்புரிவதுபோல, ஆரியரிலே தலைவர்கள், ஆரிய இனத்தைத் தமிழ்ப் பண்ணையிலே மேயவிட்டுத், தமிழ்வளம் நீர்பெருகச் செய்து, உல்லாச வாழ்வு எனும் வெண்மணலிலே படுத்துறங்கச் செய்து, காவல்புரிவதை சர் சண்முகம் காணவில்லையா ! சங்கராச்சாரி கோலத்திலும் சரி, சர்க்கார் நிர்வாகி எனும் கோலத்திலும் சரியே, ஆரிய இனத்தலைவர்கள் ஆரிய இனத்தின் சுகமொன்றே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பது, சர் சண்முகத்துக்குத் தெரியாதா? மானினம் காதல் மேம்பாட்டைத் தலைவனுக் குரைப்பது போல, இக்காட்சிகள், சர் சண்முகத்துக்குத் திராவிட இனத்திடம் அவர் காட்டவேண்டிய அன்பின் பெருக்கை உணர்த்தவில்லையா! ஆமெனில், தேரை விரைவாகச் செலுத்துக, என்றுரைக்கத் தானே வேண்டும்.

திராவிடமணியை, பண்டைப் பெருமை வாய்ந்த டில்லியில் ஜொலித்திடவும், சேரநன்னாட்டிலே ஒளி வீடவும், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான், வேறு எவரெவருக்கோ, "இரவல்" தந்தவண்ணமிருப்பது? திராவிடச் செல்வத்தை ஓமானுக்குப் பலியிட்டோம். அதன் பாழும் பசியடங்க! திராவிடத் திருவிளக்கு (சர் இராமசாமியை) வைசிராய் மாளிகைக்கு ஒளிதர "இரவல் அளித்துள்ளோம். திராவிடமணி சர் சண்முகம் தேரை விரைவாகச்செலுத்தித் தமது காதலகத்தை நோக்கி வரத் தாமதித்தால், திராவிடத்தைக் கப்பிக்கொண்டுள்ள காரிருள் நீங்கிட வழிகாணோமே