பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வர்ணாஸ்ரமம்


சண்முகம் சுட்டிக்காட்டவும்,"நான் வயதேறியவன், இதோ என் இளமையின் உருவம்" என்று பெரியார், சர் சண்முகத்தைச் சுட்டிக்காட்டவும் ஆலுக்கு விழுது விட்டது என்று ஆரியர் இது கண்டு அஞ்சவுமான நிலைமை, ஏற்படக்கூடாதா! பெரியாரின் தவறுகள்- பெரியாரின் குறைபாடுகள் - அவர் செய்யும் பிடிவாதம்- அவருடைய ஆற்றல் குறைவு-என்ற இன்னோசன்ன கூறி, பெரியாரைக் கண்டித்துவிட்டு, அவராலேயே கட்சி நசித்துவிட்டது என்று பொய்யுரைத்துவிட்டு, ஆகவே சர் சண்முகம் வரவேண்டும், என்று அழைக்கும் தோழர்கள், உண்மையிலே சர் சண்முகம், தலைவராகவேண்டுமென்று விரும்பி இதைச் செய்கிறார்களா என்பதே என் சந்தேகம். நாசியற்று, நடுத்தெருவிலே கிடத்தப்பட்ட அகதியைப் பெரியார், இன்று கூரைவீட்டிலே குடியிருக்கச் செய்திருக்கிறார்; இனி மாடிவீடு கட்ட, சர் சண்முகம் வரட்டும், வர வேண்டும், வருவது முறையுங்கூட. அதைக் கூறாது, ஏழடுக்கு மாளிகையைப் பெரியார் குட்டிச்சுவராக்கி விட்டதாகவும், மண்மேட்டிலே மாளிகை அழைக்கச் சர் சண்முகம் வரவேண்டுமென்றும் கூறுவது அழகா, நீதியா, மனச்சாட்சிக்குச் சரியா என்று கேட்கிறேன். உண்மையிலே, சர் சண்முகம் வேறுவேறு இடங்கட்கு "இரவல்" அளிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கும் எனக்கும், தமிழர் யாவருக்கும் சொந்தமான மனை, அரசியல் மார்க்கட்டிலே, காங்கிரஸ் மார்வாடியிடம் சிக்கி, ஏலம் கூறப்பட்டபோது, மனையை மீட்டவர் யார்? இதனை மற்றவர் கூறுவதைவிட, சர் சண்முகம் கூறவேண்டும். சண்முகமாலை பாடப் பெரி-