பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

29


யாரை வசைபாட வேண்டுமா! சண்முக வரவு பெரியாரின் துறவாக முடியவேண்டுமா! இருவரும் இருக்குமளவு கட்சியிலே இடமில்லையா! தேரை விரைவாகச் செலுத்திச், சர் சண்முகம் தமது மனைபுகவேண்டுகிறேன். ஆயிரக்கணக்கிலே தொண்டர்கள் அவரை ஆரவாரத்தோடு வரவேற்பர்! சிலம்பொலியும் பூஜையும் வேண்டாது நேரே, நொந்துகிடக்கும் முதியவர் அருகே நின்று," பெரியாரே ! அஞ்சற்க! வினைமுற்றி நான் வீடு திரும்பிவிட்டேன். இனி உமது பணி குறைய, நான் உதவி புரிவேன். என் ஆற்றல் இனி நமது மனைக்குப் பயன்படும்" என்று கூறவேண்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாருக்கு அவர் அளித்த அறவுரையின், அடுத்த அதிகாரம், இதுவாக இருக்க வேண்டுமென்பது என் அவா ! அது ஈடேறுமா?

சர் சண்முகம் கட்சித் தலைவராக வேண்டும், என்ற பிரச்னையைக் கிளப்பும் வேலையுடன் வேலையாகப், பெரியாரைக் கண்டித்தும் சிலர் இருப்பது, உண்மையில் எனக்குப் பிடிக்கவில்லை. சர் சண்முகத்துக்கும் அது- பிடிக்காது என்றே நான் கருதுகிறேன். பெரியாரின் பெருந்தொண்டு, வரப்பும் வாய்க்காலும் அமைந்த கட்சிக்குமட்டுமல்ல, தமிழகத்துக்கே பெரிதும் பயன்பட்டதென்பதை மறுத்துப் பேசுவோர், நாளை சர் சண்முகத்தைச் சாடாமலா இருப்பர் ! தமிழரின் தன்மானத்துக்கே வித்தூன்றிய தலைவரின் வயோதிகப்பருவம், வாகைசூட்டி வாழ்த்தும் 'பக்தர்கள் ' நிரம்பியதாக இருப்பது முறை! அஃது. இல்லையே, என்ற குறையோடு மட்டுமன்றி, அவருக்கு வசைமாலை